மலேசியா கலைவிழா! விமான நிலையத்தோடு திருப்பி அனுப்பப்பட்ட சினிமாக்காரர்கள்?

கிடா வெட்ட ஆசைதான். ஆனால் புளுகிராஸ் குறுக்கே கட்டையை போடுகிறதே என்கிற கவலை ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும். அதற்கு சற்றும் குறைவில்லாத இன்னொரு கவலை இப்போது! மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவுக்கு போகலாம் என்று ஆசை காட்டி, சுமார் 130 பேரை விமான நிலையம் வரைக்கும் வரவழைத்த விஷால் அண் கோ, கடைசி நேரத்தில் ‘டாடா’ காட்டிவிட்டு பறந்துவிட்டதாம்.

தொங்கிப்போன முகத்தோடு ரிட்டர்ன் ஆகிவிட்டார்கள் இவர்கள். ஏமாந்தவர்களில் நடிகர் பார்த்திபன், டைரக்டர் விக்ரமன் போன்ற பெருந்தலைகளும் சிக்கியதுதான் ஆச்சர்யம்.

இந்த அதிருப்தி ஒருபுறம் இருக்க… சென்னையிலிருந்து முன்னணி நிருபர்களை அழைத்துச் செல்வதாக திட்டமிட்ட விஷால், கடைசி நேரத்தில் அவர்களுக்கும் பெப்பே காட்டியதுதான் விபரீதம். எப்படியோ… ஏரோப்ளேன் றெக்கையை பற்றிக் கொண்டாவது பறந்துவிட வேண்டும் என்று துடித்த ஒரு சில துடிப்பான நிருபர்களுக்கு மட்டும் மலேசியா கலை நிகழ்ச்சியை கண்டு மகிழும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால் இங்கிருக்கிற பலரும் ‘நறநற’ கண்டிஷனில் இருப்பதால், புதிதாக கட்டப்படவிருந்த நடிகர் சங்க கட்டிடத்தின் அடியில் வைப்பதற்காக வாங்கப்பட்ட மந்திரிக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை, அவசர ஜுஸ் ஆக்கியாவது இவர்களுக்கு கொடுத்து குளிர்விக்க திட்டமிட பட்டிருக்கிறதாம்.

தாகமும் எரிச்சலும் எடுத்தவர்கள் ‘குடிக்க’க் கடவது!

1 Comment

  1. Jeevan says:

    Trusting that karuvaayan is not worth it. He will mess up.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Utharavu Maharaja Official Teaser
Utharavu Maharaja Official Teaser

https://youtu.be/bbGpoiR-aCs

Close