வாயாலேயே வடை சுடணும்! வர்றீங்களா மா.பா.கா?

ஒருவரின் இடத்தை இன்னொருவரை வச்சு நிரப்பறது ரொம்ப ரொம்ப கஷ்டம்! ஆனால் சிவகார்த்திகேயன் விஷயத்தில் அந்த கஷ்டத்துலேயும் ஒரு சுலபம் கிடைத்தது. அவர்தான் மா.கா.பா.ஆனந்த். பேச்சு, கிண்டல், நையாண்டி, முக பாவம் என ஒன்பது பொருத்தங்களிலும் ஓ.கே ஆகிவிட்டார் மா.கா.பா. அப்புறமென்ன? முன்னவர் போன ரூட்டிலேயே பின்னவரும் போக, கொட்டாம்பட்டி, சின்னாளப்பட்டி ரசிகர் மன்ற போர்டுகளில் மா.கா.பாவும் சிரித்துக் கொண்டிருக்கிறார். ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தை தொடர்ந்து மா.கா.பா ஹீரோவாக நடித்திருக்கும் ‘நவரச திலகம்’ படம் பிப்ரவரி 15 ந் தேதி ரிலீஸ். அவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்க, காம்ரான் இயக்கியிருக்கிறார்.

என்ன சொல்கிறார் டைரக்டர்?

“நம்ம படத்தின் ஹீரோ வாயாலேயே நல்லா வடை சுடுவான். ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணுற கேரக்டர் அவனுக்கு. அதில் நடிக்க பொருத்தமான ஹீரோ வேணும்னு யோசிச்சப்ப டக்குன்னு மனசுல வந்தது நம்ம மா.கா.ஆனந்துதான். ஒரு கல்யாண வீட்டுல ஒரு அழகான பெண்ணை பார்க்கிறார். கண்டதும் காதல் வந்திருது. கல்யாணம் முடிவதற்குள் அந்த பெண்ணை பிக்கப் பண்ணுகிறார். கடைசியில் பார்த்தால், கல்யாணப் பெண்ணோட தங்கைதான் அவள். அந்த கல்யாணம் நடந்துவிட்டால், சொந்த பந்த வழக்கப்படி சின்ன அத்தை முறையாக வந்துவிடுவாள் அவள். என்ன செய்வான் அவன்? கல்யாணத்தையே நிறுத்தியாகணும்! நிறுத்தினால் அவளை கட்ட முடியும். நிறுத்தினானா? ஹீரோயினை அடைந்தானா? இதுதான்ங்க கதை” என்றார் காம்ரான்.

“ல்ல கமிட் ஆகும்போது அவரு இவ்ளோ பேசுவாருன்னு தெரியாது. அப்புறம்தான் ஒரு நாள் டி.வியில் அவர் காம்பியர் பண்ணுனதை காட்டுனாங்க. வாவ்… மனுஷன் என்னமா பேசுறாரு?”என்று கண்களை விரித்து ஆச்சர்யம் காட்டுகிறார் சிருஷ்டி டாங்கே. (பழக்க தோஷத்துல இவரை பாட சொல்லிடாதீங்க மா.கா.பா)

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Aranmanai-2Review
அரண்மனை2- விமர்சனம்

தூத்துக்குடி ஆசாமி சாத்துக்குடியை நறுக்குவது மாதிரி சுலபமாக கையாள்கிற விஷயங்களில் ஒன்று ஆவிப்படம் எடுப்பது! மெல்லிசாக ஒரு கதையிருந்தால் போதும். மேலே கொட்டி நிரப்பிக் கொள்ளதான் ஏராளமான...

Close