தரைமட்ட ஓப்பனிங்! லைக்கா – ஜி.வி.பி அதிர்ச்சி!! எனக்கு இன்னொரு வார் அந்து போச்?

டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்று இரண்டு படங்களின் கலெக்ஷன், “நான்தாண்டா அடுத்த சிவகார்த்திகேயன்” என்று ஜி.வி.பிரகாஷை கொக்கரிக்க வைத்தது. அவரது ஸ்டுடியோவுக்கு போய் வரும் சினிமாக்காரர்கள் பலர், முகமெல்லாம் இருட்டோடு திரும்பி வருவதுடன், “தம்பியோட பேச்சு தாங்கலையே” என்று காதில் வழியும் ரத்தத்தை கையால் வழித்தெறிவதெல்லாம் சர்வ சாதாரணம். ஏன்? அதான் சொன்னோமே… நான்தான் நெக்ஸ்ட் சிவகார்த்திகேயன் என்று அவர் உதார் விட்ட விஷயத்தை?

அப்படியே தனுஷ், சிம்புவோட மார்க்கெட்டும் நமக்குதான் என்று அவர் பேசி வந்ததெல்லாம் மக்கள் காதில் விழுந்திருச்சோ என்னவோ? நேற்று வெளியான எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்திற்கு ஓப்பனிங்கே இல்லை. சென்னையில் சில மால்களில் மட்டும் கூட்டம் நிரம்பி வழிந்தது. வெளியூர்களில் சுத்தம் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். இதனால் கடும் அப்செட் ஆன ஜி.வி.பிரகாஷ், நான் ரசிகர் மன்றத்தை ஊக்குவிக்காம விட்டதுதான் தப்பு. இனிமே அந்த பக்கமும் கவனம் செலுத்தணும் என்று கூறிவருகிறாராம். அவிய்ங்கதான் தியேட்டரை புல்லாக்குறதுக்கு டிக்கெட் வாங்கி கிழிப்பாய்ங்க. போஸ்டர் ஒட்டி புரளிய கிளப்புவாய்ங்க. அடுத்த படம் வெளிவர்றதுக்குள்ள அந்த வேலையை கிளியரா முடிக்கணும் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.

“இந்த விஷால் மன்றத்து பசங்க செம்மையா வேலை செய்யுறாய்ங்க. அங்கிருந்து கொஞ்சம் பேரை கிளப்பிட்டு வரணும்” என்று தன் ஆட்களுக்கு கட்டளையிட்டதாகவும் தெரிகிறது. இதற்கிடையில் 2.ஓ படத்தின் வேலையை கவனிக்காமல், நடுவில் இந்த படத்தை இழுத்துப் போட்டுக் கொண்ட லைக்கா நிறுவனத்தின் செயல் அதிகாரி ராஜுமகாலிங்கத்துக்கும் மேலிடத்திலிருந்து செம டோஸ் விழுந்ததாம்.

பணத்தை தண்ணியா செலவழிக்கிற அளவுக்கு கெப்பாசிடி இருந்தாலும், கீழே விழுந்து மீசையெல்லாம் மண்ணாவதற்கு எந்த பெரிய கம்பெனிதான் ஒப்புக் கொள்ளும்? ஐயோ பாவம் லைக்கா ஓனர்!

பின்குறிப்பு- சமீபத்தில் வெளிவந்த பென்சில் படம் தரைமட்டம். அதற்கப்புறம் வந்த எனக்கு இன்னொரு பேர் இருக்கும் தரைமட்டம். எனக்கு இன்னொரு வார் அந்து போச்சே என்ற கவலையிலிருக்கும் ஜி.வி. கதை கேட்கும் விஷயத்தில் இன்னும் இன்னும் மெனக்கெடப் போகிறாராம். செய்ங்க…

4 Comments

 1. shan says:

  mr andhanan.ajith film epdi irundhalum adhu ungaluku pudikum. mannagkatti g.v film vandhu one dayla film flopnu solla nega yaru.bro new tamilcinema.com nu oru web site a vechikondu edha venumnalum eludha venam ok.

 2. baskar says:

  டார்லிங் படம் ஓட ஸ்ட்ராங்கான ஸ்கிர்ப்ட் காரணம். த்ரிஷா இல்லைனா நயன்தாரா படம் டபுள் மீனிங் வசனத்திற்காக ஓடியது. இந்த இரண்டு படங்களும் தனது நடிப்பிற்காக ஓடியது என்று ஜி.வி. தனக்குத்தானே நினைத்து கொண்டார். ஒரு ஹீரோவுக்குள்ள எந்த தகுதியும் இல்லாத ஜி.வி.பி ஒழுங்கா இசையமைப்பதை மட்டும் கவனிப்பது நல்லது.

  • Arjun says:

   Yes Baskar, Darling hit because of strong script, comedy & horror. TIN average only because of negative publicity(worst movie). GV till now doesn’t how to act, better he can go to Music.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Devi(L) – Official Teaser | Prabhudeva | Tamannaah | Vijay
Devi(L) – Official Teaser | Prabhudeva | Tamannaah | Vijay

https://youtu.be/wFATnLrRcr0

Close