‘துருவங்கள் 16 ‘ படம் பாருங்கள்… லட்சாதிபதி ஆகுங்கள்!

வருகிற டிசம்பர் 29 அன்று வெளிவரவிருக்கும் படம் ‘துருவங்கள் 16’ . இப்படத்தைக் கார்த்திக் நரேன் என்கிற 21 வயது இளைஞர் இயக்கியிருக்கிறார். ரகுமான் பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.இப்படத்தை ட்ரீம் பேக்டரியுடன் இணைந்து வீனஸ் இன்போடெய்ன்மெண்ட் வெளியிடுகிறார்.

அண்மைக்காலமாக தமிழ்த் திரையுலகில் ‘துருவங்கள் 16 ‘ படம் பேசப்பட்டு வருகிறது. முன் திரையீட்டுக் காட்சியில் படத்தைப் பார்த்த பல விஐபிக்களும் படத்தைப் புகழ்கிறார்கள். இயக்குநரைப் பாராட்டுகிறார்கள். படம் பார்த்த பலரும் படத்தின் ஊகிக்க முடியாத சவாலான திரைக்கதையை வியந்து பாராட்டுகிறார்கள் அடுத்த வாரம் வெளியாகும் இப்படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்துள்ளார்கள். படத்தைப் பார்த்து விட்டுப் படத்தின் கதையைக் கதை நிகழும் வரிசையில் யார் சொல்கிறார்களோ அவர்களில் சரியாகச் சொல்பவர்களுக்கு மூன்று பேருக்கு தலா ஒரு லட்சம் என மூன்று லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தில் திரைக்கதையின்படி காட்சிகள் முன்னே பின்னே மாற்றி கண்ணாமூச்சி காட்டி விறுவிறுப்பூட்டும் வகையில் காட்சிகள் தொடுக்கப்பட்டிருக்கும். போட்டிக்கு படத்தில் உள்ள வரிசைப்படி கதையை எழுதி அனுப்பக் கூடாது உண்மையில் படத்தின் கதை என்ன என்பதையே வரிசைப்படுத்தி எழுதி அனுப்ப வேண்டும். கதையை எழுதியோ, பேசி ஆடியோவாகவோ , வீடியோவாகவோ அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி dhuruvangal 16@gmail.com

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter