தலைசுற்ற விடும் கீர்த்தி சுரேஷ்! முன்னணி ஹீரோக்கள் எரிச்சல்!

நடிப்பும் அழகும் நல்லா அமைஞ்சாலும், அதிர்ஷ்டமில்லேன்னா அதிரசம் சுடுற வேலை கூட கிடைக்காது சிலருக்கு! ஆனால் அழகுக்கும் நடிப்புக்கும் இணையாக அதிர்ஷ்டத்தையும் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். வரவு மேல வரவு வந்தால், உறவாவது? நட்பாவது? என்ற எண்ணம் வருமல்லவா? அது வந்திருச்சோ… என்ற கவலையில்தான் இப்போது தள்ளாடுகிறது தமிழ்சினிமா. ஏன்? கீர்த்தியின் கித்தாப்பு அப்படி!

தொடர்ந்து தமிழில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு அந்தந்த படங்களும் ஹிட்டடித்ததால் டாப் நடிகைகள் வரிசைக்குள் வந்துவிட்டார். அந்த பொல்லத இடம் தந்த கவுரவத்தால், விஜய்யையே சமயங்களில் எரிச்சலூட்டி வந்தாராம் கீர்த்தி. பைரவா பட சமயங்களில் பலமுறை விஜய் மேக்கப்புடன் வந்து காத்திருக்க, சுமார் ஒரு மணி நேர தாமதமாக கூட அவர் வந்திருக்கிறாராம். வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்ட விஜய்க்கு, அப்படத்தின் பிரமோஷன் சமயத்தில் கீர்த்தி காட்டிய பந்தாவை பொறுக்கவே முடியவில்லை. இனிமேல் அவர் விஜய்யுடன் நடிப்பாரா என்கிற அளவுக்கு போயிருக்கிறது நிலைமை. போகட்டும்… நாம் சொல்ல வருவது வேறு.

கடந்த பத்து நாட்களாக தனது செல்போன் எண்ணை யாருக்கும் சொல்லாமல் மாற்றிவிட்டாராம் கீர்த்தி. முன்னணி மேனேஜர்களும், பிரபல ஹீரோக்களும் கீர்த்தியை தொடர்பு கொள்ள பழைய நம்பரில் தொடர்பு கொண்டால், எதிர்முனையில் கொர்… என்ற குறட்டை சப்தம் கூட வருவதில்லை. தேடிப்பிடித்து கீர்த்தியின் அம்மாவுக்கு போன் அடித்தால், ஆதார் எண்ணில் ஆரம்பித்து பிளட் குரூப் வரை விபரம் கேட்பதால், பலரும் பேசவே அஞ்சுகிறார்கள்.

என்னம்மா சொல்லாம கொள்ளாம நம்பரை மாத்திட்டீங்களே…? என்று கேட்டால், “என் பொண்ணு பழைய மாதிரின்னு நினைச்சீங்களா? அவ நடிச்சு தெலுங்குல இரண்டு படம் அடுத்தடுத்து ஹிட். தமிழ் படமே வேணாம்னு முடிவெடுத்துட்டோம்னா உங்க கதி என்னான்னு யோசிச்சு பாருங்க” என்றெல்லாம் மம்மி சவுண்ட் விடுவதால், கோடம்பாக்கமே படு அப்செட்!

திருக்கழுக்குன்றம் இல்லேன்னா ஒரு திருப்பரங்குன்றம்… போங்கம்மா போங்க!

1 Comment

  1. Rajii says:

    கீர்த்தி அழகுக்கும் நடிப்புக்கும் 🤔🤔🤔

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Gouatam karthik
கண்டுக்காம விட்டது தப்பா போச்சு! பீல் பண்ணிய கவுதம் கார்த்திக்

Close