எல்லா புகழும் எனக்கே! லாரன்ஸ் சிம்பு போட்டா போட்டி!

‘வடிவேலு காமெடி நல்லாயிருக்கு’ என்று கவுண்டமணியிடம் சொல்லிப் பாருங்களேன்… அப்படி சொன்ன வாயில் சூடு வைப்பார். அப்படியே வடிவேலுவிடம் போய், ‘கவுண்டமணி காமெடிக்கு இப்பவும் மவுசு இருக்கு’ என்று சொல்லுங்களேன். வாசலில் கட்டியிருக்கிற நாயை அவிழ்த்துவிட்டு “நல்லா கடி. நாலு ரொட்டி எக்ஸ்ட்ரா” என்பார் அதனிடம். காமெடி நடிகர்களே இப்படியென்றால் ஹீரோக்கள் எப்படியிருப்பார்கள்? எந்த சட்டையும் வெள்ளையாய் இருக்கக் கூடாது என்பதில் மிக மிக தெளிவாக இருப்பதுதான் கோடம்பாக்கத்தின் வழக்கம்.

கடந்த இரண்டு நாட்களாக மாணவர் போராட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்ட இருபெரும் நடிகர்களாக திகழ்கிறார்கள் சிம்புவும் லாரன்சும். தடியடி நடந்து ஆறேழு நாட்கள் கழித்துதான் முழு வேகத்தோடு கிளம்பியிருக்கிறார்கள் இருவரும். லாரன்ஸ் முதல்வரை சந்திக்கப் போன அதே நேரம், சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் சிம்பு. இது ‘அவசர பிரஸ்மீட்’ என்று சொல்லப்பட்டது நிருபர்களுக்கு. தடியடி மற்றும் கலவரம் நடந்து ஒரு வாரம் கழித்து இது பற்றி பொங்க வேண்டிய அவசியம் என்ன?

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை விடுவிக்க வேண்டி நடிகர் லாரன்ஸ் முதல்வரை சந்தித்து பேசப் போனார் அல்லவா? அதுதான் காரணமாம். நியாயமாக லாரன்சுக்கெல்லாம் முன்பு ஜல்லிக்கட்டு போராட்த்திற்கு குரல் கொடுத்தவர் சிம்புதான். அதுமட்டுமல்ல… இப்படியொரு போராட்ட வழியை மாணவர்களுக்கு காட்டியதே அவர்தான். இப்படி பிள்ளையார் சுழி போட்ட நமக்கு வர வேண்டிய புகழை, மூன்று நாட்கள் கழித்து உள்ளே வந்த லாரன்ஸ் தட்டிக் கொண்டு போவதா என்கிற வெறுப்பில்தான் அவசர பிரஸ்மீட்டை கூட்டி, “என்னை கைது செய்ங்க. இல்லேன்னா மீனவர்களை விடுதலை செய்ங்க” என்று முழங்கியிருக்கிறார் சிம்பு.

சிம்பு நினைத்த மாதிரிதான் நடந்தது எல்லாம். ஊடகங்கள் லாரன்ஸ் செய்தியை எட்டு பாயின்ட்டிலும், சிம்பு செய்தியை பதினெட்டு பாயின்டிலும் வெளியிட்டன. சிம்புவின் விளம்பர வேகத்தின் முன், சைலன்ட் ஆகிவிட்டது லாரன்ஸ் முதல்வர் சந்திப்பு.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் வென்றுவிட்டார்கள். இந்த பொறாமை போராட்டத்தில் வெல்லப் போவது சிம்புவா? லாரன்ஸா?

விடை தெரியறதுக்கு முன்னாடி இன்னும் எத்தனை வடைக்கு தீ வைக்கப் போவுதோ போலீசு?

4 Comments

 1. Mannan says:

  சிம்பு பிள்ளையார் சுழி போட்டனால மன்னிச்சு விடலாம். லாரன்ஸ் ஒரு இருவது பேருக்கு பிரியாணி வாங்கி கொடுத்து, எல்லா ஸ்டுடென்ட்ஸும் இவன் கிட்ட இருக்கற மாறி ட்ராமா பண்ணி, முதல் அமைச்சரை பாத்திருக்கான். ஸ்டுடென்ட்ஸுக்குனு ஒரு தலைமை இல்லனனால, லாரான்ஸ் தலைவன் மாறி ஏமாத்துறான். கடவுள் பாத்திட்டுருக்கார்; கடவுள் இவனோட மொட்டை சிவாவை கெட்ட சிவாவா நினைச்சு காலி பண்ணுவாராக.

 2. Mannar Mannan says:

  ராகவா லாரன்ஸ் மாணவ போராளிகளுக்காக ரூ 1 கோடி செலவு செய்துள்ளார்.
  ஆனால், பீப் புகழ் சொம்பு, தனது இமேஜ் பீப் புகழால் டேமேஜ் ஆனதால் அதை சரி செய்யவும், விஷாலை பழிவாங்கவும் பயன்படுத்தி கொண்டான்.
  இவனை ஆதரிப்பவன் குடும்பத்தை தான், இவன் தனது பீப் பாடல் மூலம் சிறப்பித்தான், அவர்களது குடும்பத்து பெண்களை தான் இவன் கேவலப்படுத்தினான்.

 3. Pandi says:

  தமிழ் பெண்களை கேவலப்படுத்திய உனக்கு பிறந்த நாள் ஓரு கேடா

Leave a Reply

Facebook

Follow Us on Twitter