பிக் பாஸ்! கடைசி நேரத்தில் தப்பிய ஜெயம் ரவி?

திடீரென பிந்து மாதவியை உள்ளே இறக்கியிருக்கிறது பிக் பாஸ் டீம்! நமீதாவின் தமிழுக்கு சற்றும் சளைத்ததல்ல பிந்துவின் தமிழ்! இந்த கடித்து குதறலுக்கும் காது கொடுக்கிற தமிழனுக்கு, நல்லவேளை… சனி ஞாயிறுகளில் வரும் கமல் ஒருவரே ஆறுதல்! அவரையும் கடுகடுக்க விட்டிருக்கிறதாம் நிர்வாகம். (அது தனி செய்தியாக பிறகு)

இதற்கிடையில் நிகழ்ச்சியில் இன்னும் சில விசேஷங்களை கொண்டு வர முடிவு செய்திருக்கும் சேனல், தமிழின் முன்னணி நடிகர் நடிகைகளை கொத்திக் கொண்டு போக காய் நகர்த்தி வருகிறார்கள். ஒரு நாள் ரஜினியும் கமலுமே பிக் பாஸ் வீட்டுக்குள் போகவிருக்கிறார்கள் என்றொரு தகவலும் உண்டு. 400 கோடி கலெக்ஷனை குறி வைத்து நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்காக 100 கோடி வரைக்கும் கூட செலவழிக்கலாம். தப்பு என்ன இருக்கு? (கமல் சம்பளம் 20 கோடி)

அப்படி அவர்களிடம் சிக்கியிருக்கிறார் ஜெயம் ரவி. பிக் பாஸ் வீட்டுக்கு நீங்க வரணும் என்றார்களாம் முதலில். அதற்கப்புறம் ஒரு சின்ன பர்பாமென்ஸ் போதும் என்றார்களாம். இரண்டுக்கும் சம்மதித்த ரவியிடம், கடைசியாக ஒரு குண்டை போட… ஆளை விடுங்கப்பா என்று ஓட்டமெடுத்திருக்கிறார் அவர். இவர்கள் போட்ட அந்த குண்டு?

“பத்து நாள் மட்டும் பிக் பாஸ் ஷோவுல அந்த டீம் கூட உள்ள இருங்களேன். கேட்கறதை தர்றோம்” என்றதுதான்!

ஜுலியை கூட சகிச்சுக்கலாம். சினேகனின் பொம்பள வேஷத்தை நினைத்து ஓட்டமெடுத்திருப்பாரோ ஜெயம் ரவி?

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Vijay Sethupathi
விஜய் சேதுபதியை அவமானப் படுத்திய ஜீவா, சசிகுமார்?

Close