நான்கு முட்டாள்களை தேடிப்போன பாக்யராஜ்!

ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. இப்படத்தை ரஜாக் இயக்கியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார்.

கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் ஆகிய பிரம்மாண்ட இயக்குனர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். மேலும், ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன், ஸ்வாதி, அஸ்மிதா, ரத்திஷ், விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா உள்ளிட்ட 4500 துணை நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

வாழ்க்கையில் விரக்தியடைந்து, யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கும் நான்கு முதியவர்களுக்கு, அதிக தொகைக்கு பெரிய வேலை ஒன்று வருகிறது. இதை முடிக்க நான்கு முட்டாள் இளைஞர்களின் உதவியை நாடுகிறார்கள். இந்த இளைஞர்களின் செயல்களால், நான்கு முதியவர்கள் சமூகத்தில் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். இறுதியில் இதிலிருந்து நான்கு முதியவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்பதே படத்தின் கதை.

இதில் கே.பாக்யராஜ் போலீஸ் அதிகாரியாகவும், மன்சூர் அலிகான் காட்டுவாசித் தலைவராகவும், ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் அரசியல்வாதியாகவும் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்திய இப்படத்தில் திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து உருவாக்கி இருக்கிறார்கள். பெரும்பாலான படப்பிடிப்பு மலைப்பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
tharamani ram
மாநில அரசு இருந்தால்தானே? தரமணி ராம் நக்கல்!

Close