விக்ரம் வேணாம்! நக்கல் செய்த கீர்த்தி சுரேஷ்!

எங்காவது புதுக்கடை திறந்தால், ஒரு வாட்டர் பாக்கெட்டாவது வாங்கிக் குடிச்சிடணும் என்று ஆசைப்படுகிற மனசுதான் சராசரி மனசு! தமிழ்சினிமாவில் புதுக்கடை என்றால் இப்போது கீர்த்தி சுரேஷ்தான். முன்னணி ஹீரோக்களின் பார்வை மொத்தமும் அவர் பக்கமே திரும்பியிருப்பதால், அவர் பேங்க் கணக்கில் அநியாயத்துக்கு லட்சங்களும் கோடிகளும்! பெருமாள் உண்டியலே நிரம்பினாலும், க்யூவில் நின்று மறு உண்டியலுக்காக காத்திருக்கும் பக்தனை போல கீர்த்தி சுரேஷின் கால்ஷீட்டுக்காக எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் காத்திருக்க தயாராகிவிட்டார்கள் சில ஹீரோக்கள்.

அந்த வரிசையில்… ஐயோ பாவம். நம்ப விக்ரமும்!

அவர் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷை அணுகினார்களாம். “அவருக்கு நான் ஜோடியா? அவரு என்னைவிட முப்பது வயசாவது ஜாஸ்தி இருப்பாரே…” என்றெல்லாம் தேவையில்லாமல் பேசி டென்ஷன் ஏற்றிவிட்டாராம் அவர். போனவர்கள் பல்லை கடித்தபடியே திரும்ப… இவர்கள் கேட்ட அதே தேதிகளை தெலுங்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கக் கொடுத்துவிட்டார்.

பவனுக்கு உங்களை விட ரெண்டு வயசுதான் ஜாஸ்தியாக்கும்? என்னம்மா இப்படி காலை வார்றீயேம்மா…

No Comments

Leave a Reply

Facebook

Follow Us on Twitter