பலத்த மவுனத்திற்கு பின் வாயை திறந்த ரஜினிக்கு கமல் நன்றி!

எதையும் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமலும், எதையும் செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமலும் மவுனம் காப்பதில், ரஜினிக்கு நிகர் அவரே! ‘தென்னங்கன்னை நடும்போதே தேங்காய்க்கு சொல்லி வைக்கணும்’ என்கிற அளவுக்கு மிதமிஞ்சிப் போகும் அவரது சுறுசுறுப்புக்கு மற்றுமொரு உதாரணமாக அமைந்துவிட்டது இந்த தியேட்டர் ஸ்டிரைக் விவகாரமும், லோக்கல் டாக்ஸ் விவகாரமும்!

ரஜினி குரல் கொடுக்கணும். ரஜினி குரல் கொடுக்கணும் என்று விவேக், சேரன் போன்றோர் கத்தி ஓய்ந்த நேரத்தில் தன் கோரிக்கையை அரசுக்கு தெரிவித்தார் ரஜினி. அதுவும் தனது ட்விட்டர் பக்கத்தில். ‘தமிழ் திரைப்படத்துறையில் லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் அடங்கியிருப்பதால், சினிமாத் துறையினரின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ள ரஜினியின் ட்விட்டுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் கமல்.

நேற்று கமல் வெளியிட்ட அறிக்கை புயல் என்றால், ரஜினியின் ட்விட் சின்ன டேபிள் பேன். போகிற போக்கை பார்த்தால், ரஜினியை முந்திக் கொண்டு அரசியல் கிணற்றில் கமல் குதித்துவிடுவார் போலிருக்கே?

1 Comment

  1. பாரதிதாசன் says:

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தனியாக கட்சி துவக்கி தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது 100 % உறுதி.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Theater Strike
திருப்தி(?!) படுத்தியாச்சு! ஒருவழியாக முடிவுக்கு வருகிறது தியேட்டர் ஸ்டிரைக்!

கலைஞர் முதல்வராக இருந்த போதும் சரி. அம்மா முதல்வராக இருந்தபோதும் சரி. முதுகு தண்டில் ஸ்பிரிங் வைத்து வணங்கி வந்த சினிமாத்துறை, எடப்பாடி வந்த பின், அந்த...

Close