எலும்பு வல்லுனர் எச்.ராஜா! பிரித்து மேய்ந்த கமல்!

கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தி கமல்தான்! எங்கே அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று கரை வேஷ்டிகளுக்கு கலக்கம். அது அப்பட்டமாக தெரிய ஆரம்பித்துவிட்டது. நேற்று முளைத்த லெட்டர் பேட் கட்சிகள் கூட, கமல் அரசியலுக்கு வருவதற்கு என்ன தகுதியிருக்கு? என்று குதிக்க ஆரம்பித்துவிட்டன. பா.ஜ.க வின் தேசிய செயலாளர் எச்.ராஜா, கமலுக்கு முதுகெலும்பு இல்லை என்று கூறியிருப்பது அதிர்ச்சிதான்.

ஆதாரத்தோடு ஊழல் குற்றச்சாட்டு வைத்தால், எதிர்கொள்வோம் என்று அதிமுக வின் அமைச்சர்களும் கூறி வர, நேற்று படு காட்டமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டார் கமல். அது அப்படியே சூடு மாறாமல் இங்கே-

வணக்கம்.

இந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல.

அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாகக் காசுக்கு விலை போகாத தமிழக வாக்காளருக்கும் கூட.

ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்டபின்பும், சாட்சி உண்டா? ஆதாரம் உண்டா? என கேட்கும் குணாதிசயம், கல்லுளிமங்கர் போன்ற ஊழலார்க்கே உரித்தான குணாதிசயம்.

ஆதாரத்துடன் வா, அரசியலுக்கு வா என்று அறைகூவல் விடும் தம்பி மாண்புமிகு. ஜெயகுமாரோ, அல்லது எலும்பு வல்லுனர் தம்பி எச். ராஜாவோ, நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதை உணராதவர்கள். தெரிந்தோ தெரியாமலோ என்று இந்தித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தேனோ, அன்றே நான் வயதுக்கு வராத அரசியல்வாதிதான்.

நாற்காலி மோகத்தில் பத்தையும் பறக்கவிட்டு அடுக்கு மொழியில் அறிவுரைகளை அள்ளிவீசுபவர்கள்… ஊர் அறிய கைக்கூலி வாங்கி கடமை செய்ய மறந்தவர்கள்,…என்னை வரி ஏய்ப்புக்காக நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுவது, ஒருங்கே கோபத்தையும், சிரிப்பையும் வரவைக்கிறது.

ஆதாரத்துடன் சொல்ல வேண்டுமாம்! அமைச்சர் கட்டளை இது.

ஊரெல்லாம் கேட்ட ஊழல் பற்றிய ஓலம் அதற்குள் மறந்திருந்தால் நினைவுப்படுத்த மக்களே இருக்கிறார்கள். நடுவில் நான் எதற்கு பூசாரி?

இந்த அறிக்கை, அமைச்சர் கேட்டுக்கொண்ட படி ஆதாரங்களை மக்களே இணைய தளங்களில் அல்லது உங்கள் வசதிகேற்ற ஊடகங்களின் மூலம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்க்கு அனுப்பிவைக்கும் ஒரு வேண்டுகோளே. நீங்கள் இவ்வரசின் காலத்தில், ஊழலால் அனுபவித்த இன்னல்களை விளக்கிக் கேள்வியுடன் சேதி அனுப்புங்கள். எக்காரணம் கொண்டும் மரியாதை குறையாமல் இருக்கட்டும் உங்கள் கேள்விகள்.

தற்கால அமைச்சர்களை விட மாண்புமிக்கவர் மக்கள் என்று அவர்கள் புரிந்துகொள்ளட்டும். குறைந்தபட்சம் சில லட்சம் கேள்விகள் நிச்சயம் வரும். அத்தனை கேள்வியாளர்களையும் கைது செய்வீரோ அல்லது பதில் சொல்வீரோ! பொறுத்துதான் பார்க்கவேண்டும். இத்தனை லட்சம் பேரை கைது செய்து வைக்க போதிய சிறைகள் தென்னகத்தில் இல்லை.

நிற்க… செய்தி சரியாகப் புரியாதவங்களுக்கு…

“ஊழலே இல்ல நிரூபி பாப்போம்னு அமைச்சர் கேட்டார்ல.? ஊழல் இருக்குன்னா எழுதி அனுப்பிடுங்க. கார்டு, கவர்ல, கடுதாசில வேணாம். கிழிச்சுப் போட்டுட்டுப் போயிட்டே இருப்பாங்க. டிஜிட்டல் யுகம் இது. டிஜிட்டலா பதிவு செய்ங்க. ஆனா மரியாத தவறாம அதச் செய்ங்க.”

எல்லாத் துறைக்கும் மக்கள் குரல் கொடுப்பார்கள். என் துறைக்கான ஊழலை நான் சுட்டிக்காட்டுகிறேன். சினிமாவில் வரி விலக்கு அளிக்கிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு படத்திற்கும் தனிச்சான்றிதழ் வழங்க நடக்கும் லஞ்ச நாடகங்களுக்கு என்னை போல் வெகு சிலரைத் தவிர, மற்றவரெல்லாம் பயந்து உடந்தையாய் இருக்கின்றனர். இது என் குரல்
துணிவுள்ள சினிமாக்காரர்கள் மட்டும் குரல் கொடுத்தாலே, அரசின் ஊழல் பாத்திரம் பொங்கி வழியும்.

மக்கள் மந்தைகள் அல்லர்.

மக்கள் குரல் கேட்கும் மாண்பை எய்துங்கள்.

விரைவில் அது கேட்கும்.

தெளிவாக

உங்கள்

– கமல் ஹாசன்.

அனுப்ப வேண்டிய துறை சார்ந்த அமைச்சர்கள் முகவரி

http://www.tn.gov.in/ministerslist

2 Comments

 1. Vijay says:

  கமலஹாசன் மிகச்சிறந்த நடிகரல்ல. மூன்றாம்தர நடிகர்தான். இவரைவிட நடிப்பில் முத்திரைப்பதித்த மிகச்சிறந்த நடிகர்கள் தமிழ் திரையுலகில் நிறையபேர் இருந்தனர், இருக்கின்றனர். எஸ் வி ரங்காராவ், எஸ் வி சுப்பையா, பாலையா, சிவாஜி கணேசன், எம் ஜி ஆர், எஸ் எஸ் ராஜேந்திரன், ஜெமினி கணேசன், எஸ் ஏ அசோகன்,தேங்காய் சீனிவாசன், மனோகர் போன்ற தம்பட்டம் அடித்துக்கொள்ளாதவர் பலர் இருந்தனர்.. திராவிட கழகத்தினரின் வசையிலிருந்து தப்பவே தான் பெரியாரின் கொள்கையை கடைபிடிப்பதாக போடும் வேஷத்தையை இந்த அப்பாவி பாடகி நம்புவது ஏமாளித்தனம்.

 2. Kannan says:

  அரசியலுக்கு வருவதற்கான அத்தனை தகுதிகளும் கமலுக்கு உள்ளது.
  மூன்று நான்கு திருமணம், திருமணம் இல்லாமல் “லிவ் இன் வாழ்க்கை”,
  இடையிடையே நாஸ்திக பேச்சு, நடிக்க வாற ஹீரோயின்களோட
  “தேவையற்ற …” காட்சி, “புரொடியூசரோட பணத்தில்” டிஸ்கஷன்
  லொகேஷன் என்று வெளிநாடு சுற்றல், எல்லாவற்றையும் விட
  முக்கியமானது …உலக மகா “நடிப்பு”, எனவே தமிழ் நாடு தழைத்தோங்க
  கமல் அரசியலுக்கு வரணும்.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Twist In Politics !!- Rajinikanth Kamal Meeting Soon !!!
Kamal Tweets Gone Crazy !!!

https://youtu.be/vI0Y_kGakKs

Close