ராமேஸ்வரம் குலுங்கியது! கமல்ஹாசனின் கம்பீர நடை!

ரஜினி கமல் இல்லாமல் தமிழ் சினிமா வரலாறு இருக்கப் போவதில்லை. அரசியலிலும் அப்படியொரு வரலாறு எழுதப்படும் போலவே தெரிகிறது. இப்போதுதான் வில்லை எண்ணை போட்டு துடைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. அதற்குள் ஈட்டியாக பாய்ந்து கொண்டிருக்கிறார் கமல்.

இன்று ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை துவங்கினார் கமல். முன்னதாக கலாமின் அண்ணனிடம் ஆசி பெற்றவர், அவருக்கு தன் கையால் ஒரு கடிகாரத்தை கட்டிவிட்டு சந்தோஷப்பட்டார். பின்னர் அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு செல்வதாக திட்டம். அதற்குள் போலீஸ் அனுமதி மறுக்க… மீனவர்களை சந்திக்கக் கிளம்பினார். பொன்னாடை போர்த்துவது வழக்கமில்லை. என் உடலே பொன்னாடை என்று மீனவர்களை கட்டி அணைத்துக் கொண்டார் கமல்.

அதற்கப்புறம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கமல் சொன்ன பதில்களின் ஒரு வரி வடிவம்தான் கீழே-

 • கலாம் படித்த பள்ளிக்கு நான் செல்லவிருந்ததில் அரசியல் இல்லை –
 • பள்ளிக்கு செல்வதை தடுக்க முடிந்தவர்களால், நான் பாடம் படிப்பதை தடுக்க முடியாது –
 • தடைகளை கடந்து சரித்திரம் படைக்க வேண்டும் என்றாலும் அதற்கு நான் தயாராக உள்ளேன்-
 • தமிழ் ரசிகர்கள் உள்ளத்தில் வாழ்ந்த நான் அவர்களுடைய இல்லத்தில் வாழ ஆசைப்படுகிறேன்:
 • அரசியலுக்கு வர தொழில் முக்கியமில்லை ; உணர்வும் உத்வேகமும் உள்ள யாரு வேண்டுமானாலும் வரலாம்-
 • எங்களுக்கு பொன்னாடை போர்த்தும் வழக்கமில்லை; நான் தான் ஆடை-
 • இன்று தாய்மொழி தினம் என்பதால்தான் என் கட்சியை இன்று அறிவிக்க திட்டம்
 • கொள்கையை பற்றி கவலைப்படுவதைவிட மக்களுக்கு செய்ய வேண்டியதை யோசிக்க சொன்னார் சந்திரபாபு நாயுடு.
 • நான் இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பதில்லை; என்னுடைய நம்பிக்கை அப்படி-
 • கலாமின் இறுதிச்சடங்கில் பங்கேற்காதது பற்றிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார் கமல்.

இன்று மாலை தனது கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்து வைக்கவிருக்கும் கமல், அந்த பிரமாண்ட கூட்டத்தை மதுரை ஒத்தக்கடை ஏரியாவில் நிகழ்த்தவிருக்கிறார்.

1 Comment

 1. மணிவண்ணன் says:

  ரஜினிகாந்த் மற்றவர்களுடைய இயக்கத்தில்தான் சூப்பர் ஸ்டார் ஆனார் , கமல் தன்னை தானே இயக்கி சூப்பர் ஆக்டர் ஆனவர்.
  ரஜினி ஆரம்பத்தில் இருந்தே ஒரு சிறந்த மனிதராகவும், நல்ல பண்புள்ளவராகவும், எளிமையாகவும் விளங்குகிறார். திறமைக்கும் குறையில்லை. இவர் தான் நமது தமிழகத்துக்கு தேவை.
  தமிழ் நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்ட ஒரே தமிழ் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தான். தமிழக மக்களின் ஏகோபித்த மக்களின் அன்பை பெற்றவர் எங்கள் தமிழ் தலைவர் ரஜினி அவர்கள் தான்.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Goutham-menon
சிக்குனா மொட்டைதான்! கதற விடும் கவுதம்மேனன்!

Close