மூடுங்க கமல்வேசன்! ஏறியடிக்கும் எடப்பாடி கோஷ்டி

சசிகலா முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்த நாளில் இருந்தே நாட்டில் வாழும் ஆடு பூனைகள் கூட, ‘ஐயய்யோ…’ என்று அலறியது. இந்த வரலாறு காணாத ‘வழுக்கலை’ சற்றே அமுக்கலும் அலட்சியமுமாக அதிமுக வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் எடுத்துக் கொண்டாலும், மக்கள் புலம்பல் நிற்பதாக இல்லை. (மக்க நினைக்கறதுதான் நடக்குதாக்கும்?) ஆனால் சட்டம் சசிகலாவை உள்ளே தள்ள… தமிழ்நாட்டில் இன்னும் நிலைமை மோசமானது. அவரால் அடையாளம் காட்டப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க நடந்த முயற்சி முழு வெற்றியாக முடிந்தது. மக்களுக்கல்ல… அதிமுகவின் சசிகலா கோஷ்டிக்கு.

இந்த நிலையில்தான் கமல், குஷ்பு, ஸ்ரீப்ரியா, சித்தார்த், சூர்யா, கருணாகரன், உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் மிக மிக போல்டாக தங்கள் கருத்துக்களை ட்விட்டர் மூலம் வெளிப்படுத்தினார்கள். அதிலும் கமலின் ட்விட், மிக மிக ஸ்டிராங்கானது. வாக்கெடுப்புக்கு முன் எம்.எல்.ஏ க்களை மக்களை சந்திச்சுட்டு வந்து ஓட்டுப் போட சொல்லுங்க. மக்கள் எல்லாரும் கவர்னருக்கு மெயில் அனுப்புங்கள் என்று அவரது மெயில் அட்ரசையும் ட்விட்டரில் வெளியிட்டார் கமல்.

இதற்கப்புறமும் சும்மாயிருக்குமா புதிய முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி? கமலை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டது. அதே ட்விட்டர், வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சோஷியல் வலைதளங்களில் தங்கள் சார்பாகவும் கருத்துக்களை பதிவு செய்தார்கள்.

மிஸ்டர் கமல், நீ நடிக்கிற ஒவ்வொரு படத்தையும், எடுக்கிறதுக்கு முன்னாடி பொதுமக்கள்கிட்ட போய்…

“இந்த படத்துல இதான் கதை, இந்த இந்த சீன் எல்லாம் இருக்கு, உங்களுக்கு பிடிச்சா வந்து பாருங்கனு சொல்றதில்லையே? படத்தை எடுத்து முடிச்சிட்டு, தியேட்டர்ல போய் தானே படம் எப்படி இருக்குன்னு பொதுமக்கள் தெரிஞ்சிக்கிறாங்க. பொதுமக்கள்கிட்ட கருத்தை கேட்டா நீ படம் எடுக்கிற? நீ கடைசியா எடுத்த உத்தமவில்லன் படம் பெரும் மொக்கை. இனிமே நீ படமே எடுக்க கூடாதுனு எனக்கு தோணுது. என்னோட கருத்தை கேட்டு நீ படம் நடிக்கிறதை விட்டுடுவீயா? உன் பொண்ணு மூஞ்சியை பார்க்க சகிக்கலை. மலர் டீச்சரா நடிச்சதை, ஓட்டு ஓட்டுனு ஓட்டுனாங்க. அதுக்காக உன் பொண்ணு படம் நடிக்கிறதை விட்டுடனும்னு சொன்னா ஏத்துக்குவீயா? எப்படி தியேட்டர்ல போய் படம் நல்லா இருக்கா இல்லையான்னு மக்கள் முடிவு பண்றாங்களோ, அதேபோல எம்எல்ஏக்கள் முடிவை மக்கள் ஏத்துக்கிறாங்களானு, தேர்தலில் சொல்லுவாங்க நீ மூடிட்டு போ… என்று கூறியிருக்கிறார்கள்.

இந்த பதிவுக்குதான் “மூடுங்க கமல் வேசன்” என்றும் தலைப்பிட்டிருக்கிறார்கள்.

நாட்ல நல்லதை சொன்னா யாருக்குதான் பொறுக்குது? டோன்ட்வொர்ரி கமல். உங்கள் சேவை தொடரட்டும்!

4 Comments

 1. Tamilarasan says:

  உன்னைய யாரு டா அரசியலுக்கு அழைத்தது ???
  கூத்தாடிகள் அரசியலுக்கு வேண்டாம்

 2. சித்தார்த் says:

  கமல் ஒரு கடைந்தெடுத்த சந்தர்ப்பவியாதி தான். அதில் என்ன சந்தேகம். தனக்கு ஒரு பிரச்சனை என்றவுடன், எதிர்த்து நின்று போராடாமல் வெளிநாடு ஓடிவிடுவேன் என்று சொன்ன வ ன் எப்படி போராளி ஆக முடியும் >
  இப்ப ஊழல் ஜெயா செத்து விட்டால் என்றவுடன் அ வ னு க் கு திடீர் வீரம் பொறக்குது,.
  சினிமாவில், உடனடியாக அ வ னு க் கு ஒரு ஹிட் தேவை. அதற்காக போடும் போலி வேஷம் தான். இது,. வேஷம் போட அவ னு க் கு ஒன்னும் சொல்லி தர வேண்டிய அவசியம் இல்லை.

 3. பாலசுப்பிரமணி says:

  ஜெ.,இருந்தவரை பம்மிக் கொண்டிருந்த நிறைய பேர் இப்போது போராளிகளாக, புனிதர்களாக, மகான்களாக விஸ்வரூபம் எடுத்து வருகிறார்கள். குறிப்பாக கமலஹாசன் கடந்த ஒரு மாதகாலமாக மாணவர்களின் ரட்சகன் போலவும், மாணவர்களுக்கு ஆபத்பாந்தவன் போலவும் டுவிட்டர்களில் பொங்கி வழிகிறார். அதற்கு ஏற்றார் போலவே சு. சாமியும் கமலை குறி வைத்து தாக்குகிறார். தமிழ்நாடு பிஜேபியினர் அமைதியாக இருக்கிறார்கள். கமலும் சு.சாமியும் சீரியசாக சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கமலுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நடிகர்களே வேண்டாம் என்றவர்கள் கமலுக்கு ஆதரவாக சமூகவலைத் தளங்களில் போராடிக் கொண்டிருகிறார்கள். இதில் தான் உள்குத்து இருக்க வேண்டும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். மண்டை காய்கிறதா நண்பர்களே..? அதிமுகவுக்கு சரியான தலைமை இல்லை. திமுகவில் சகோதரர் சண்டை. இந்த நேரத்தில் கமல் போன்ற ஒருவர் தமிழக பிஜேபிக்கு அவசியம். தூக்கு கமலை..! ஆனால் அவர் பின்னால் அணிவகுக்க மாணவர்கள், இளைஞர்கள் வேண்டும். அதற்கான முதல் கட்டம் டுவிட்டார் மூலம் புரட்சிநடிகர் ஆனார் கமல். இரண்டாம் கட்டம் சு.சுவாமி,கமல் மோதல்..இனிப் போகபோகப் பாருங்கள். பிரதமரின் திரைக்கதை புரியும் என்கிறார்கள்.
  நம்பவே முடியவில்லை. இப்படியெல்லாமா பிளான் போடுவார்கள்.
  மாணவர்களே உஷார்

 4. தளபதி says:

  தனிமனித ஒழுக்கம் இல்லாதவன் கமல். எத்தனை படங்களில் நம் தமிழ் பெண்களை கேவலமாக சித்த்தரித்து படம் எடுத்து இருப்பான். அத்தனைக்கும் சேர்த்து மொத்தமாக, தமிழ்நாடு அரசு, முதலில் கமலை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

Leave a Reply

Facebook

Follow Us on Twitter