அஜீத்தின் தைரியம் கமலுக்கு இல்லை! உசுப்பிவிடுகிறாரா அமைச்சர்?

தானுண்டு… தன் தனி மனித சுதந்திரம் உண்டு என்று சந்தோஷமாக இருக்கும் அஜீத்தை ஏன் இந்த வம்புக்குள் இழுக்கிறார்களோ, அந்த அரசியலுக்கே வெளிச்சம். ஆனாலும், சில வருஷங்களுக்குப் பின் அரசியல் வானில் அஜீத்தின் வெளிச்சம் அடிப்பதால், ரசிகர்களின் மனசுக்குள் பூவாளி தீவாளி!

சமீபகாலமாக கமல்ஹாசன் வீசும் ஒவ்வொரு சொல்லும், ஏதாவது ஒரு அதிமுக பிரமுகரின் அடி வயிற்றில் விழுந்து அனலாக கொதிக்கிறது. “எல்லா துறையிலும் ஊழல் மலிந்துவிட்டது” என்று சொன்னாலும் சொன்னார். அமைச்சர்களின் கோபத் தீ கமலின் வீட்டையே கொளுத்திவிடுகிற அளவுக்கு கொழுந்துவிட்டு எரிகிறது. “கமலெல்லாம் ஒரு ஆளா? அவனுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது” என்று உயர் கல்வி அமைச்சர் ஒருமையில் பேசியதை இன்னமும் அதிர்ச்சி விலகாமல் நோக்குகிறது தமிழகம்.

இன்னொரு பக்கம் பிக் பாஸ்க்கு எதிராகவும் கமலுக்கு எதிராகவும் கட்சிகளையும் அமைப்புகளையும் தூண்டி விடுகிற வேலைகளும் சைலன்ட்டாக நடந்து வர, முன் வைத்த காலை ஒரு போதும் பின் வைக்கப் போவதில்லை என்ற பிடிவாதத்தில் இருக்கிறார் கமல். இந்த நிலையில்தான் கமல் மீது வன்கொடுமை சட்டத்தை ஏவி அவரை உள்ளே தள்ள வேண்டும் என்று பேசியிருக்கிறார் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம். அதோடு விட்டாரா?

“முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முன், “நடிகர்களை மிரட்றாங்க” என்று அஜீத் பேசியபோது இந்த கமல் எங்கே போயிருந்தார்? அஜீத்தின் துணிச்சல் கமலுக்கு இருக்கிறதா?” என்று கேட்க, சும்மாயிருக்கும் அஜீத்தை எதுக்குப்பா இவங்க சண்டைக்குள் இழுக்குறாங்க என்று அதிர்ச்சிக்குரல் கேட்கிறது.

எல்லாரும் கூடி கமல்ஹாசனுக்கு கட்சி ஆரம்பித்துக் கொடுத்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள் போலிருக்கு! பா.ஜ.க வின் புதிய இந்தியாவில், இதுவும் ஒரு அஜன்டாவா இருக்குமோ?

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Gemini Ganesanum Suruli Rajanum Review
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் -விமர்சனம்

Close