நடிகர் திலீப்பை காப்பாற்ற நினைக்கிறாரா கமல்? கிளம்பும் சர்ச்சை!

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிக்கி, சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் திலீப்புக்கு சிறைக்குள்ளேயே வாழ்க்கை முடிந்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது கேரளம். அவருக்கு ஆதரவாக யாருடைய கரங்களும் நீண்டபாடில்லை. அதுமட்டுமல்ல… கேரள அரசாங்கமும் பாராமுகம் காட்டியதால், பால் சுத்தம் பரிசுத்தமாக இந்த வழக்கை கையாண்டு வருகிறது போலீஸ்!

திலீப்பின் ஏராளமான சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் தகவல்கள் வருகின்றன. கேரள- தமிழக எல்லையான கோவை வரை தன் ரியல் எஸ்டேட் தொழிலை விரிவு படுத்தியிருக்கும் திலீப்புக்கு, அவரிடம் சொத்து பற்று விற்று வாங்கிய வகையிலிருக்கும் சில பெரிய மனிதர்கள் சப்போர்ட் மட்டும் இருந்து வருகிறதாம். மற்றபடி சினிமா சைடிலிருந்து சிங்கிள் அனுதாபம் இல்லை.

இந்த நிலையில்தான் நம்ம ஊரு வேட்டுக்காரன் கமல், திலீப் விஷயத்தில் அக்கறை காட்டுவதாக கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். அவர் ஓணம் விசேஷத்தை முன்னிட்டு கேரள முதல்வர் பிரணயி விஜயனை சந்தித்தது கூட, ‘ஓணும்னுதான்’ என்றும் கதைக்கிறார்கள் இங்கே.

என்ன ஓணுமாம் கமலுக்கு?

‘உள்ளே’யிருக்கிற திலீப்பை ஒரு சேதாரமும் இல்லாமல் வெளியே கொண்டு வந்திடலாமா என்று முதல்வரின் காதை கடித்திருக்கிறாராம் அவர்.

இப்படி சொல்றவங்க அதற்கு என்ன ஆதாரம் வைச்சிருக்காங்களோ தெரியல… ஆனால் நெருப்பெட்டி இல்லாம தீ ஏதய்யா?

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
sathish-comedy
வெளியூர் ஹீரோ சர்டிபிகேட்! வேலைக்கு ஆகுமா சதீஷ்?

Close