காலில் எலும்பு முறிவு கமலுக்கு ஆபரேஷன்!

குதிக்கறது… பறக்கறது… தாவுறது… பாயுறது… என்று சினிமாவில் சகல ரிஸ்க்கும் எடுத்த கமலுக்கு, உடலில் ஆங்காங்கே அந்த நினைவுகள் சின்ன சின்ன அடையாளங்களுடன் இருக்கும். ஆனால் நேற்று அவருக்கு ஏற்பட்டது எந்த பெருமையிலும் சேர்த்தியில்லாத ஒன்று! விடியற்காலை மூன்று மணி சுமாருக்கு அவருக்கு ஒரு சிறு விபத்து. மாடிப்படியிலிருந்து இறங்கும் போது கீழே விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது.

பலத்த அடி. அவசரம் அவசரமாக அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவருக்கு, அங்கு இரண்டு கால்களிலும் சிறு ஆபரேஷன் நடந்துள்ளது. எலும்பு முறிவு என்றும் மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் ஓரிரு நாளில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என்றும், சில வாரங்கள் வீட்டிலேயே ரெஸ்ட்டில் இருப்பார் என்றும் தெரிகிறது. அவருக்கு நெருக்கமான திரையுலக வட்டாரம் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் சென்று நலம் விசாரித்து வருகிறது.

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
saya
வன இலாகா அதிகாரியாக சோனியா அகர்வால் நடிக்கும் “சாயா”

சாயா என்பதற்கு சக்தி நிறைந்த என்று பொருள். அந்த சக்தி நிறைந்த வார்த்தைக்கும் ஆத்ம சக்திக்கும் நல்ல நோக்கத்திற்குமான தொடர்பு இருப்பதால் படத்திற்கு சாயா என்று பெயரிட்டுள்ளனர்....

Close