நயன்தாரா இடத்தில் காஜல்! நல்ல முடிவா இது?

‘குயின்’ படத்தின் ரீமேக் ரைட்ஸ் தன்னிடம் இருப்பதாக மம்பட்டியான் தியாகராஜன் பலமுறை பிரஸ்சிடம் கூறி வந்திருக்கிறார். அந்தப்படத்தை இயக்கப் போவது நான்தான் என்றும் கூறிவந்தவர், கங்கணாரனவத் நடித்த அந்த கேரக்டரில் நடிக்க நயன்தாரா, தமன்னாவையெல்லாம் அணுகியது பலருக்கும் தெரியும்.

ஐயகோ… மம்பட்டியானுக்கு ஏமாற்றம். அந்தப்படத்தின் ரீமேக்கை இப்போது ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். படத்தின் பெயர் ‘பாரீஸ் பாரீஸ்’

‘குயின்’ ரைட்ஸ் எப்படி கைமாறியது என்பதல்ல பிரச்சனை. நயன்தாரா, தமன்னா என்று யோசித்த கேரக்டரில், இப்போது காஜல் அகர்வால் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

“தமிழ், மலையாளம், கன்னடம்னு மூணு மொழிகள்ல படத்தை தயாரிக்கப் போறோம். விருதுநகர்ல கதை ஆரம்பிக்குது. அப்படியே பல வெளிநாடுகளுக்கு டிராவல் ஆகுது” என்றார் ரமேஷ்.

இதே விருதுநகர் ஏரியாவை பிறப்பிடமாக கொண்ட தமிழச்சி தங்கபாண்டியன் வசனத்தை எழுதினால் பொருத்தமாக இருக்கும் என்று ரமேஷ் அரவிந்த் கருதியதில் வியப்பில்லை. மிக இயல்பாக இப்படத்தில் வந்து உட்கார்ந்து கொண்ட தமிழச்சி, தமிழிலக்கிய உலகத்தின் முக்கிய தூண்களில் ஒருவராச்சே? அவ்வளவு அற்புதமாக டயலாக்குகளை எழுதியிருக்கிறாராம்.

அதெல்லாம் காஜலுக்கு புரிந்து பேசுவதற்குள், ஒன்று தமிழச்சி மும்பை ஸ்டைலுக்கு மாறியிருக்க வேண்டும். அல்லது காஜல் விருதுநகருக்கு ஷிப்ட் ஆகியிருக்க வேண்டும். இரண்டில் எது நடந்தாலும் ஷாக் நமக்குதான்!

படம் – குணாஜி

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Karuppan-VijaySethupathi
இது வாய்தானே…. பின்னாடி எப்படி பேசுமோ? யதார்த்த விஜய் சேதுபதி!

Close