கபாலி ஸ்பூப்… நாளிதழ் ஆசிரியரிடம் எகிறிய சென்சார் ஆப்பீசர்?

🚨• 22ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தமிழக கல்வித்துறை பரிசீலித்து வருகிறது.

🚨• கல்லூரிகளுக்கு எப்படியும் மாணவர்கள் வரமாட்டார்கள் என்பதால் தனியாகவிடுமுறை அறிவிக்கத் தேவையில்லை என மேற்கல்வித்துறை முடிவு செய்ததாகத் தெரிகிறது.

🚨• சாலையில் மக்கள் நடமாட்டமே இருக்காது என்பதால் கடைகளை அடைப்பதற்கு பதிலாக ஒட்டுமொத்தமாக விடுமுறை அறிவித்து விடலாம் என தமிழக வியாபாரிகள் சங்கம் யோசித்துக்கொண்டிருக்கிறது.

🚨• 29ஆம்தேதி நடைபெற இருக்கும் வேலை நிறுத்தத்தை 22ஆம் தேதிக்கு மாற்றலாமா என்று முடிவு செய்ய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற இருக்கிறது.

🚨• ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் ரயில் சேவையை நிறுததுவதில்லை என தென்னிந்திய ரயில்வே அறிவிப்பு ஓரிருநாளில் வெளியாகும்.

🚨• பால், எரிவாயு, போக்குவரத்து, மருத்துவமனைகள், தடியடி நடத்தும் காவல்துறை போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டும் 22ஆம் தேதி தடையின்றித் தொடரும் என தமிழக அரசு அறிவிக்கும் என விவரமறியாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

💔இவ்வளவுதான் மீதமிருக்கா இல்லே இன்னும் ஏதாச்சும் சேக்கணுமா?

ம்… படிச்சாச்சா? கபாலி ரிலீஸ் பற்றிய கலாட்டா பதிவுதான் இது என்பதை சட்டென புரிந்து கொண்டிருப்பீர்கள் அல்லவா? இதே போலொரு ஸ்பூப்… (நையாண்டி) செய்தியைதான் வெளியிட்டது அந்த ஆங்கில நாளிதழ். அடுத்த நிமிஷமே லைனுக்கு வந்துவிட்டார் தமிழக சென்சார் போர்டு ஆபிசர் மதியழகன்.

மேற்படி ஸ்பூப்-ல் ஒரு செய்தியாக இப்படி குறிப்பிட்டிருந்தது அந்த நாளிதழ்.

கபாலி படத்தின் சென்சார் காட்சியில் உறுப்பினர்கள் விசிலடித்தும், டான்ஸ் ஆடியும் படத்தை ரசித்தார்கள். ஒரு மெம்பர் கையோடு கொண்டு வந்திருந்த பூக்களை ரஜினி வரும் காட்சியில் அவர் மீது தூவி விசிலடித்தது குறிப்பிடத்தக்கது. – இப்படி!

யாரும் இதை சீரியஸ் ஆக நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவே கபாலி ஸ்பூப் என்று தலைப்பிட்டு இந்த செய்தியை பிரசுரித்திருந்தார்கள். இதற்குதான் கடும் எதிர்ப்பை பதிவு செய்தாராம் மதியழகன். “எங்க சென்சார் போர்டு மெம்பர்களை நீங்க என்ன நினைச்சீங்க? உங்க மேல கேஸ் போடுவேன்” என்று அவர் எகிற, நாளிதழ் ஆசிரியர், “நல்லா கவனிச்சு படிச்சீங்களா சார். நாங்கதான் அது நையாண்டி பதிவுன்னு போட்டுட்டமே. அப்புறம் என்ன” என்று பதிலளித்திருக்கிறார். அதற்கப்புறம் கோபம் அடங்காத மதியழகன், நாளிதழ் ஆசிரியரை கடுமையான வார்த்தைகளால் ஏச, பதிலுக்கு அவரும் விடவில்லையாம்.

காமெடி பதிவுக்கும் சீரியஸ் பதிவுக்கும் வித்தியாசம் தெரியாதவர் எப்படி சென்சார் போர்டுக்கு அதிகாரியானார்? இவரால் எப்படி படங்களை நடுநிலையோடு அணுக முடியும் என்று போகிற வருகிறவர்களிடமெல்லாம் சொல்லி புலம்ப ஆரம்பித்திருக்கிறார் நாளிதழ் ஆசிரியர்.

நாடு வௌங்கிரும்!

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Kattappava Kanom Stills 009
Kattappava Kanom – Stills Gallery

Close