கபாலி2 நமது செய்தியை உறுதிபடுத்தினார் தனுஷ்!

கபாலி பார்ட்2 படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம்தான் தயாரிக்கிறது என்கிற செய்தியை நாட்டுக்கு முதன் முதலில் சொன்னது நமது newtamilcinema.com. நமது அறிவிப்பு வெளிவந்த தினத்தன்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் அதை உறுதி செய்திருக்கிறார் தனுஷ். நமது செய்திக்கான லிங்க் http://bit.ly/2c1997P

2.0 வுக்கு பின் எமது வுண்டர்பார் நிறுவனத்தின் அடுத்த வெளியீடு என்று அறிவிக்கப்படும் அந்த ட்விட்டர் பதிவில், நெருப்புடா… என்ற பாடலின் துவக்கத்தையும் வெளியிட்டு ரஜினி ரசிகர்களுக்கும் தனது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை தந்திருக்கிறார்.

இவரது அறிவிப்பு வெளியான நிமிஷத்திலிருந்தே உலகம் முழுவதுமிருக்கும் ரஜினி ரசிகர்கள் தனுஷுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த படத்தையும் பா.ரஞ்சித்தே இயக்குகிறார் என்பதுதான் சிறப்பு.

 

No Comments

Leave a Reply

Facebook

Follow Us on Twitter