200 தொழிலாளர்களுக்கு ஜீவா பிறந்தநாள் பிரியாணி விருந்து

ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா, மானஸா, முனீஸ்காந்த், மனோபாலா, மயில்சாமி, யோகிபாபு, சுஜாதா மற்றும் பலர் நடிப்பில் உருவாகும் படம் போக்கிரி ராஜா. இப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது வி.ஜி.பி. அருகில் பிரம்மாண்ட அரங்க அமைப்பில் இமான் இசையமைத்துள்ள “ரெயின்கோ ரெயின்கோ” என்ற பாடலுக்கு ஜீவா, ஹன்சிகா நடனமாடும் வித்தியாசமான பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இப்பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் பிருந்தா நடனம் அமைத்து வருகிறார்.

இப்பாடல் காட்சி ஜீவா பிறந்தநாளன்று படமாக்கப்பட்டு வந்த நிலையில் போக்கிரி ராஜா படக்குழுவினர் பிரம்மாண்ட கேக் வரவழைத்து ஹன்சிகா மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியதுடன் படக்குழுவில் பணிபுரிந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மதிய விருந்தாக பிரியாணி வழங்கினார் ஜீவா.

இவ்விழாவில் படத்தின் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா, தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார், நடன இயக்குனர் பிருந்தா, ஒளிப்பதிவாளர் ஆஞ்சநேயலு மற்றும் படக்குழுவினர் அனைவரும் உடன் இருந்தனர்.

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
samantha-bangalore
சமந்தாவுக்கு மெட்ராஸ் ஐ நல்லவேளை… ஆர்யா தப்பித்தார்!

மலையாளத்தில் வெளிவந்து எல்லாருடைய மனசையும் கொள்ளையடித்த ‘பெங்களூர் டேஸ்’ படத்தை அப்படியே தமிழில் ரீமேக் செய்கிறது பிவிபி நிறுவனம். ஆர்யா, ராணா, பாபிசிம்ஹா, சமந்தா, ஸ்ரீதிவ்யா, பூ...

Close