ஜெ.ஆவி உக்கிரமாக சுற்றி வருகிறது! 2023 வரை இங்குதான் இருக்கும்! பிரபல சாமியார் அசோக்ஜி பரபரப்பு

பழனியை பூர்வீகமாக கொண்டவர் பிரபல ஜோதிடர் அசோக்ஜி. தியான வித்தைகளில் ஸ்பெஷலிஸ்ட். ஆருடம் சொல்வதில் கில்லி இவர்.

கடந்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுக ஜெயிக்கும் என்று சொன்னார். அதிமுக ஜெயித்தது. அதே போல ஜெயலலிதா சிறையிலிருந்து வெளியில் வருவார் என்றும் சொன்னார். அது நடந்தது. அதுபோலவே சென்னையில் வெள்ளம் வரும். எல்லாரும் தப்பித்து வெளியேறுங்கள் என்று வெள்ளம் வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே எச்சரித்தார். அதற்கப்புறம் அதுதான் நடந்தது.

அவர் தற்போது ஜெயலலிதா ஆவி சாந்தி அடையவில்லை. கடைசி காலத்தில் தன்னை கேவலப்படுத்தியவர்களை பழிவாங்கும் என்று கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அவர் கூறியிருப்பதாவது-

இந்து மத தர்மப்படி எந்த ஒரு ஆத்மாவும் 3 நாள் கழித்துதான் கர்மாவை சேரும் என்பது விதி. ஜெயலலிதாவின் ஆன்மா திருப்தியற்ற நிலையில் இருப்பதால் அவரது உடலை விட்டு இன்னும் முழுமையாக வெளியேறவில்லை. பொதுவாக இறந்த பிறகு பிரேத தோஷம், பிரேத சாபம் என்று ஒன்று உண்டு. மூன்று நாட்கள் வரை இறந்த உடலை கேவலப்படுத்தினாலோ அல்லது அவமானம் செய்தாலோ அதற்கு நிச்சயம் சாபம் உண்டு. அது மாதிரியான சாபத்திற்கு நிச்சயம் நிறைய பேர் ஆளாகி இருக்கிறார்கள். ஜெ. உடலுக்குள் உயிர் இருந்த காலக்கட்டத்தில் அவரிடம் உண்மை இல்லாமல் இருந்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு.

இந்து மத ஆகம விதிப்படி ஜெயலலிதாவின் குடும்பத்தில் சடங்குகள் செய்யாமல் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அவரது ஆவி அதிதீவிர ஆத்திரத்தோடு இருக்கிறது. ஜெயலலிதா விரும்பிய வீடு, ஆசைப்பட்டு அணிந்த ஆடைகள், பொருட்கள் இவைகளை யார் எடுத்து கொண்டாலும், பயன்படுத்தினாலும் அது அபகரிப்பாகும். அப்படி செய்பவர்களுக்கு நிச்சயம் ஜெயலலிதா சரியான பாடத்தை, தண்டனையை வழங்குவார்.

அதுபோலவே ஜெயலலிதா ஆவி பூலோகத்தில் 2023 வரை நிச்சயம் இருக்கும். ஜெயலலிதா ஆவி அடுத்த பிறவி எடுக்க இன்னும் 6 வருஷம் ஆகும் என கூறி உள்ளார்.

நம்பலாமா, வேண்டாமா?

 

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
pranitha-eva
எனக்காக தாங்கினார் ப்ரணிதா! புயலை கிளப்பும் இயக்குனர்!

Close