நான்தான் அஜீத்! ஜெய்யின் அலட்டலுக்கு சரியான பாடம் புகட்டிய நிஜ நிலவரம்!

யாருக்கும் பேட்டி தருவதில்லை. எந்த பட விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை. இவ்விரண்டு விஷயத்தில் பிடிவாதம் காட்டுகிற ஜெய்யை கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறது இன்டஸ்ட்ரி. அவரிடம் இது குறித்து கேட்கும் சினிமாக்காரர்களிடம், ஏன்…? அஜீத் சார் பண்ணினா மட்டும் ஒத்துக்குறீங்க? நான் பண்ணினா தப்பா? என்கிறார் அவர்.

பெருமாள் கோவில் சுண்டலும், பேரின்ப விலாஸ் சென்னாவும் ஒண்ணா? என்று கேட்டு கதறும் இன்டஸ்ட்ரி, ஒரு கட்டத்தில் அமைதியாகிவிட்டது. இப்படி நானும் அஜீத்தும் ஒண்ணு என்று நிலைமை புரியாமல் பினாத்திக் கொண்டிருக்கும் ஜெய்க்கு, இந்தத் தகவல் பேரிடியாக இருந்தால் ஆச்சர்யமில்லை. ஜெய் நடித்து இந்த பொங்கலுக்கு திரைக்கு வரப்போகிற படம் எனக்கு வாய்த்த அடிமைகள். புயல் வரும் நேரத்தில் பொரிக்கடலை விற்கப் போன கதையாக, விஜய்யின் பைரவா வருகிற நேரத்தில் எ.வா.அ படம் வந்தால் என்னாகும்?

பெரும்பாலான தியேட்டர்களை பைரவாவுக்கு கொடுத்துவிட்டார்களாம். ஜெய் படத்திற்கு சின்னஞ்சிறு தியேட்டர்கள், பாத்ரூமை கழுவியே பல வருஷம் ஆன தியேட்டர்கள் என்று கிடைப்பதால், பேசாம ரிலீசை தள்ளி வைக்கலாமா என்கிற அளவுக்கு வெறுத்துப் போயிருக்கிறார்களாம். இந்த விஷயமெல்லாம் எனக்கெதுக்கு? நான் நடிச்ச படம் அஜீத் நடிச்ச படம் மாதிரி என்று இன்னமும் வறட்டு தவளையாய் கத்திக் கொண்டிருக்கிறார் ஜெய்.

விட்டா ஜெய் ங்கற பேர்லதான் விஜய்ங்கற பேரே ஒளிஞ்சுருக்கு. அவருக்கு எதுக்கு அத்தனை தியேட்டர்னு கேட்டாலும் கேட்பார்.

No Comments

Leave a Reply

Facebook

Follow Us on Twitter