ஏன்தான் இந்த ஜெகனையெல்லாம் கூப்பிடுறாங்களோ? பாழாய் போன சினிமா மேடை!

ஜெகன் மாதிரியான ஒரு அழுக்கு சொம்பை சினிமா மேடைகளில் ஏற்றி, தன்னையும் அசிங்கப்படுத்திக் கொண்டு, அந்த மேடையையும் அசிங்கப்படுத்துகிற விழாக்களில் ஒன்றாகிப் போனது நேற்று நடந்த ‘சகுந்தலாவின் காதலன்’ பட விழா. முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், இன்னும் பல பெரிய மனிதர்கள் சூழ்ந்திருந்த அந்த மேடையை இந்த அழுக்கு சொம்பு, மாறி மாறி நாறடித்துக் கொண்டேயிருந்தது. சற்றும் மேடை நாகரீகம் இல்லாமல் ‘ங்கொய்யால…’ என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார் மனுஷன்.

மேடையில் பேச அழைக்கப்படுகிறர்களுக்கும், இவர் கொடுக்கும் முன்னோட்டத்திற்கும் துளி சம்பந்தமில்லை. அடிக்கடி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்ய வந்தது போல, அது குறித்தும் வார்த்தைக்கு வார்த்தை உளறிக் கொட்டிக் கொண்டிருந்தார்.

ஜுலி, நமீதா, என்று என்னென்னவோ பேசி பேசி அறுத்த ஜெகன், உண்மையில் நிகழ்ச்சியில் நீண்டநேரம் பேச வேண்டியவர்களை கூட ஒரு நிமிஷத்துல பேசி முடிங்க என்று வாயை அடைக்கக் கிளம்பியதுதான் கொடுமை. (முதல்ல தொகுப்பாளர்கள் வாயை அடக்கினாலே நிறைய நேரம் மிச்சப்படும்)

மேடைக்கு வந்த விஷாலின் தங்கையின் எலுமிச்சை கலரை கூட விட்டுவைக்கவில்லை இவர். ‘ஏம்மா நாயெல்லாம் வளர்க்குற. என்னை மட்டும் கண்டுக்க மாட்டேங்குற?’ என்று ஜெகன் உளறியதற்கு வேறொரு பெண்ணாக இருந்திருந்தால் செ.பி. இருக்கும்.

அட. ச்சே… ஒரு நல்ல விழாவை இப்படி நாறடிச்சுட்டியே தம்பீ…

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
miga miga avasaram news
சார் ப்ளீஸ்… நீங்க பண்றது தப்பில்லீங்களா?

Close