என்னது…. அஜீத்தை முந்திவிட்டாரா சிவகார்த்திகேயன்? கேலிக்கு ஆளான கணக்கு வழக்கு!

அஞ்சும் அஞ்சும் எட்டுன்னா கூட மன்னிச்சுடலாம். அஞ்சும் அஞ்சும் அறுபது என்றால் எப்படியய்யா? ஐங்கரன் நிறுவனத்தின் ஆதாரபூர்வமான வெப்சைட் வெளியிட்டிருக்கும் ஒரு கணக்கு, அஜீத் ரசிகர்களின் வயிற்றில் அடுப்பை மூட்டி, அதில் நம்பிக்கையை போட்டு வறுத்துக் கொண்டிருக்கிறது. நிஜமா, பொய்யா என்று தெரியாமல் தடுமாறிப் போயிருக்கிறார்கள் அவர்கள். ஆனால் கோடம்பாக்கம் சொல்கிற கணக்கு, ஐங்கரன் கணக்கை ஐயோ பாவம் ஆக்கிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் வெளியான அஜீத்தின் வேதாளம் மலேசியாவில் 165 தியேட்டர்களில் வெளியாகி பதிமூன்றரை கோடி வசூல் செய்திருக்கிறது. அதுவே விஜய்யின் தெறி 235 தியேட்டர்களில் வெளியாகி எட்டரை கோடி வசூல் பண்ணியிருக்கிறது. இந்த கணக்கு வெறும் மலேசியாவுக்கு மட்டும். சிங்கப்பூர், இலங்கை மற்றும் உலக நாடுகளில் எப்படி கலெக்ஷன் ஆகியிருக்கும் என்று கணக்குப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் இதே ஐங்கரன் சொல்லும் சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ வெளிநாட்டு உரிமம் மொத்தமாக சேர்த்தே நாலு கோடியை தாண்டவில்லை. (இதில் எப்போது அஜீத்தை தாண்டினார் சிவா?)

பொதுவாகவே வெளிநாட்டு உரிமை பிசினசில் அஜீத்துக்கும் விஜய்க்கும் ஒரு கோடிதான் வித்தியாசம் என்கிறது வியாபார வட்டாரம். ஏழாம் அறிவு படத்தை ஒவ்வொரு நாடாக பிரித்து விற்றதால், சூர்யா விஜய்யை முந்திய காலம் ஒன்று கூட இருந்தது. பொதுவாகவே வெளிநாட்டு உரிமையின் விலை யார் படத்திற்கு அதிகம் என்றால், ரஜினியை விட்டு விடுங்கள். அவர் சூப்பர் மேன். அவருக்கு நெக்ஸ்ட் என்றால், அது அஜீத் மட்டுமே என்கிறது கோடம்பாக்கம்.

சிவகார்த்திகேயனை பொறுத்தவரை, தானுண்டு தன் வேலையுண்டு என்று மிகச் சிறப்பாக ‘கோல்’ அடித்துக் கொண்டிருக்கிறார். அவரை அஜீத்தோடும் விஜய்யோடும் ஒப்பிடுவதன் மூலம் இருவரது ரசிகர்களையும் சிவகார்த்திகேயனுக்கு எதிராக தூண்டும் வேலை சைலண்ட்டாக நடக்கிறதோ என்ற சந்தேகத்தைதான் இந்த பொய் கணக்கு வெளிப்படுத்துகிறது.

ஒருவேளை அஜீத் கால்ஷீட் கொடுக்காத கடுப்பில்தான் இப்படியெல்லாம் கிளப்பிவிடுகிறார்களோ என்னவோ?

பின்குறிப்பு- அந்த ட்விட்டர் கணக்கு போலியானது என்று அறிவித்திருக்கிறது ஐங்கரன். சறுக்குனா மாதிரி சறுக்கறதும், விழுறா மாதிரி விழுறதும் சினிமாவுல சகஜமப்பா 

3 Comments

 1. shakthi says:

  ne sonnathallam ok than but,after rajini not a ajith

 2. Vijay says:

  Rajini ku piragu vijay thavira evan venunalum nenga sollalam apdithane amount vangureenga .. Vijay valarchi ungaluku payam da bhaadu.. after rajini Ajith na why his movie not collected 100Crs/

 3. Pandiyan says:

  SIVAKARTHIKEYAN IS BETTER THAN VIJAY & AJITH
  SIVAKARTHIKEYAN IS A NEXT THALA / THALAPATHI IN TAMIL CINEMA FIELD.
  ALL THE BEST SIVA.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Simbu-GVPrakash
சிம்பு- ஜி.வி.பிரகாஷ் மோதல்? தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து!

‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்திற்கு பிறகு, ‘நானும் ஹீரோதான்...’ என்று கான்பிடன்ட்டாக களம் இறங்கிய ஜி.வி.பிரகாஷின் இன்றைய நிலைமை? கொக்கு தலையில் வெண்ணை இல்லை... வெறும் சுண்ணாம்பாகிவிட்டது....

Close