சிறு படத் தயாரிப்பாளரின் வயிற்றில் அடித்தாரா அஜீத்? பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனரின் ஸ்பீச்!

‘அவள் பெயர் தமிழரசி’ என்ற தரமான படத்தை இயக்கிய மீரா கதிரவனின் அடுத்த படைப்பு விழித்திரு. விதார்த், கிருஷ்ணா, தன்ஷிகா, டி.ஆர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு விதார்த் வரவில்லை.

ஒரு படத்தின் ஹீரோ, தன் படத்தின் நிகழ்ச்சியையே புறக்கணித்தால் யாருக்குதான் கோபம் வராது? பொங்கிவிட்டார் மீரா. இந்தப்படத்தின் தயாரிப்பாளரும் மீரா கதிரவன்தான். “போஸ்டர்லயும் விளம்பரத்திலேயும் என் படத்தை பெருசா போடுங்க” என்று கேட்கிற நடிகர்கள், அந்தப்படத்தின் புரமோஷன்களில் கலந்து கொள்ளாதது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். இங்கு விதார்த் வரவில்லை. ஆனால் ஒரு சம்பவத்தை நினைவு படுத்தணும் என்று கூறிவிட்டு தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

இந்தப்படத்தில் விதார்த் நடித்துக்கொண்டிருந்த சில நாட்கள் கழித்து இப்படத்தின் பி.ஆர்.ஓவும் அஜீத்தின் மேனேஜருமான சுரேஷ் சந்திரா என்னிடம் வந்தார். அவருடன் விதார்த்தும் வந்திருந்தார். “உங்ககிட்ட அஜீத் சார் பேச சொன்னார்” என்று கூறினார். அஜீத் சாரே எங்கிட்ட பேச சொன்னாரா என்று கேட்டேன். “ஆமாம்” என்று கூறிய சுரேஷ் சந்திரா, வீரம் படத்தில் விதார்த் நடிக்கிறார். அந்த படத்திற்கு கொடுத்திருக்கும் தேதிகள், உங்கள் படத்திற்கு கொடுத்திருக்கும் தேதிகளோடு கிளாஷ் ஆவதால், உங்களை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க சொன்னார்” என்றார்.

இந்தப்படத்தில் விதார்த்துடன் சேர்ந்து சுமார் 20 பேர் நடிக்கிறார்கள். அவர்களை எல்லாம் மீண்டும் ஒருங்கிணைப்பது பெரிய வேலை. இருந்தாலும் அஜீத் சார் சொல்கிறாரே என்று அனுப்பி வைத்தேன். ஒரு மாதம் அப்படத்தில் நடித்தார் அவர். ஆனால் என் படத்திற்கு மீண்டும் அந்த 20 பேரை சேர்க்க எனக்கு ஆறு மாதம் தேவைப்பட்டது. விதார்த்தால் ஆறு மாதம் ஷுட்டிங்கே நின்றது. அப்படிப்பட்ட விதார்த் இப்போது வரவில்லை. வருத்தமாக இருக்கிறது என்றார் மீரா கதிரவன்.

நமது சந்தேகமெல்லாம் இதுதான். ஒரு படத்தின் ஷுட்டிங் ஆறு மாதம் தள்ளிப் போனால் அது அப்படத்தின் தயாரிப்பாளருக்கு எவ்வளவு பெரிய சுமை? வட்டி குட்டி போட்டு, அந்த குட்டியும் வட்டி போடுமே? இந்த சினிமா கணக்குகள் பற்றி அறியாதவரா அஜீத்?

அதேவேளையில், அடுத்தவரை ஃபோர்ஸ் பண்ணி எதையும் திணித்து பழக்கமில்லாதவர் அஜீத். ஒருவேளை தெரிந்தே அவர் அப்படி நடந்திருந்தால், சிறு பட தயாரிப்பாளர் ஒருவரது வயிற்றில் அடித்த பெருமை, அல்டிமேட் அஜீத்தையே சேரும்!

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
நடிகர் சங்கத்துல ஆமை பூந்திருச்சு… விஷாலுக்கு எதிராக துணை நடிகைகள் ஆவேசம்
நடிகர் சங்கத்துல ஆமை பூந்திருச்சு… விஷாலுக்கு எதிராக துணை நடிகைகள் ஆவேசம்

https://www.youtube.com/watch?v=0MqhN4jdjtg

Close