அஜீத் அப்படி செய்வாருன்னு நினைக்கலே! அந்த சம்பவத்தை அழுதபடியே விவரிக்கும் மேக்கப்மேன்!

நமது தொழில் வட்டத்திலிருப்பவர் எளியவராக இருந்தாலும், அவரையும் நேசி! முழுதாக அன்பு கொள்! இதுதான் அஜீத்தின் பலவருஷ பாலிஸி. ஊர் என்ன சொன்னாலும், ‘என் வழி தனி வழி’ என்பதில் அவருக்கு நிகர் அவர்தான். அதை வலியுறுத்துவது போல நடந்த அந்த சம்பவத்தை தற்போது கேட்க நேர்ந்தது. அஜீத் ரசிகர்களும் கொண்டாடட்டுமே என்பதால் அது அப்படியே இங்கே.

அஜீத்தின் மகன் ஆத்விக் பிறந்த நாள் கடந்த 2 ந் தேதி சென்னையிலிருக்கும் ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அஜீத்தின் உறவினர்களும், நெருங்கிய நட்பு வட்டாரமும் அழைக்கப்பட்டிருந்தனர். திரையுலகத்தை சேர்ந்தவர்கள் சிலரும் அங்கு வந்திருந்தார்கள். முன்னதாக மனைவி ஷாலினிக்கு மேக்கப் அலங்காரம் செய்வதற்கு ஒரு மேக்கப் மேனை அஜீத்தே ஸ்பெஷலாக போன் செய்து அழைத்திருந்தார்.

குறித்த நேரத்திற்கு முன்பாகவே அங்கு சென்ற மேக்கப் மேன் ஷாலினிக்கும் ஷாம்லிக்கும் சேர்த்தே மேக்கப் செய்திருக்கிறார். விருந்தினர்கள் வந்தபின் அவர்களோடு பேசுவது, போட்டோ எடுத்துக் கொள்வது என்று செம பிசியாகிவிட்ட அஜீத், எல்லாரும் கலைந்து போன பின்தான் இவரை தேடியிருக்கிறார். “நான் வரச்சொன்ன மேக்கப் மேன் போயிட்டாரா?” என்றாராம் ஷாலினியிடம்.

“அப்பவே போயிட்டாரே…” என்று கூறியிருக்கிறார் அவர். “ஐயோ சம்பளத்தையும் வாங்கல. சாப்பிடவும் இல்ல போலிருக்கே?” என்றவர், நள்ளிரவு 12 மணியை தாண்டிய அந்த நேரத்திலும் போன் அடித்துவிட்டார் மேக்கப் மேனுக்கு. “தம்பி… நீங்க சாப்பிடாம போயிட்டீங்க போலிருக்கு. சம்பளமும் வாங்காம போயிட்டீங்க. கெஸ்ட் நிறைய பேர் வந்ததால் உங்களை கவனிக்க முடியல. ஸாரி…” என்று கூற, எதிர்முனை கரகரவென அழ ஆரம்பித்துவிட்டது. “ஐயோ சார்… நான் ஒரு பெரிய ஆள்னு எங்கிட்ட போய் சாரியெல்லாம் கேட்கிறீங்க. நான் சாப்பிட்டுதான் வந்தேன்” என்று ஒரு பொய்யை சொல்லி சமாளித்திருக்கிறார்.

மறுநாள் வெளியூர் செல்லவேண்டி இருப்பதை அவரிடம் சொன்ன அஜீத், “உங்களை நான்தான் போன் பண்ணி வரச்சொன்னேன். என் கையால உங்களுக்கு சம்பளம் கொடுக்கணும்னு நினைக்கிறேன். இல்லேன்னா வீட்ல வந்து வாங்கிக்க சொல்லிடுவேன். என்ன பண்றது?” என்று கவலைப்பட… “இல்ல சார். அது ஒரு விஷயமே இல்ல. நீங்க இருக்கும்போதே நான் வர்றேன் ” என்று கூறினாராம் அந்த மேக்கப் மேன்!

மரியாதை முக்கியம். அதற்குள்ளும் ஒரு ‘முறை’ வைத்திருக்கிறாரே… அதுதான் அதிசயம்!

3 Comments

  1. கமல் says:

    மலையாளி அஜித் படத்தை உண்மையான தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.

  2. cujoo says:

    மற்ற தமிழ நடிகர்கள் என்ன செய்தவர்கள்.
    And Everyone knows Ajith family background. These Vjaiy’s fans spread this propaganda to bring down ajith as he is from kerala. MGR is also from Srinlanka?

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
முனிஸ் காந்தை எல்லாருக்கும் பிடிக்கும்! சிவகார்த்திகேயன் பாராட்டு
முனிஸ் காந்தை எல்லாருக்கும் பிடிக்கும்! சிவகார்த்திகேயன் பாராட்டு

https://www.youtube.com/watch?v=BmwsXafyLwI

Close