அவள பத்தி பேசாதீங்க… நிருபரிடம் கடுப்படித்த ஹீரோவின் மனைவி!

தனி ஒருவனாக இருந்தும் சிரிக்கலாம். அல்லது கூட்டமாக நின்றும் சிரிக்கலாம். ஏனென்றால் விஷயம் அப்படி! ஒரு ரோஜாச் செடி ஜன்னலுக்கு வெளியே பூத்தால் சந்தோஷம். அதுவே ஜன்னலுக்குள்ளும் தலை நீட்டி “இந்தா பூ” என்றால் இன்னும் சந்தோஷம்தானே வரும்? ஆனால் இங்கு வந்தது சந்தோஷமல்ல, எரிச்சலோ எரிச்சல். பின்னணியில் நடந்ததென்னவோ?

எதுக்கு பில்டப்? நேரடியாக விஷயத்திற்கு வருவோம். சமீபத்தில் நயன்தாரா நடித்த ஒரு பட விஷயமாக அப்படத்தின் ஹீரோவிடம் பேச முயன்றார் ஒரு பெண் நிருபர். அவரிடம் இருந்த ஹீரோவின் நம்பருக்கு போன் அடித்தால், எதிர்முனையில் எடுத்தது ஹீரோ அல்ல. அவரது மனைவி. ஐயோ பாவம்… அந்த நம்பருக்குரிய போனை வீட்டில் வைத்துவிட்டு வேறொரு போனுடன் சென்று விட்டார் போலும். நிருபரும் பெண் என்பதால் சகஜமான விசாரிப்புகள். “உங்க கணவர் பிரமாதமா நடிச்சுருந்தாரு. இவ்வளவு வருஷமா அவர் நடிச்ச படங்களில் பல முக்கியமானதாக இருந்தாலும், இது ரொம்ப முக்கியமானது” என்றெல்லாம் நிருபர் கூற, “யெஸ்… யெஸ்…” என்று ஆமோதித்தாராம் மனைவி.

பேச்சு மெல்ல ஹீரோயின் பக்கமும் நகருமல்லவா? “நயன்தாரா அந்த சீன்ல…” என்று ஏதோ சொல்ல நிருபர் வாயெடுக்க, “அவளப்பத்தி மட்டும் பேசாதாதீங்க. போனை வைங்க…” என்று கடுப்படித்த குடும்பத்தலைவி படக்கென்று போனையும் கட் பண்ணிவிட்டாராம்.

அன்வான்ட்டட் எலி ஆயுளுக்கும் மறக்காத மாதிரி என்னவோ செஞ்சு வச்சுருக்கணும். இல்லேன்னா எதுக்கு இம்புட்டு கோவம்?

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter