பல வருஷங்களுக்குப் பின் ஹேமமாலினி நடிக்கும் ” கெளதமி புத்தர சாதகர்ணி “

எதை சொன்னாலும் பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் சொல்லி விட்டால் வெற்றி நிச்சயம் என்பது இப்போதைய நிஜம்.. அதற்கு உதாரணம் பாகுபலி 1பாகுபலி 2 படங்களின் வசூல் சாதனை. அது மாதிரியான இன்னொரு பிரமாண்டமான படம் தான் “ கெளதமி புத்ர சாதகர்ணி “ ஆந்திராவில் வெளியாகி சுமார் 150 கோடிக்கும் மேல் வசூல் சாதனை ஏற்படுத்திய இந்த படம் அதே பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. பாலகிருஷ்னாவின் 100 வது படமாகவும், அவருக்கு மணிமகுடமாகவும் இந்த படம் அமைந்தது. ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரிப்பில் இந்த படம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது.

இந்த படத்தின் நாயகி ஸ்ரேயா. மற்றும் கபீர்பேடி தணிகலபரணி, சுபலேகாசுதாகர் இவர்களுடன் இந்தி நடிகை ஹேமாமாலினி நடித்திருக்கிறார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹேமாமாலினி நடித்த படம் இது.

வசனத்துடன் தமிழாக்கப் பொருப்பேற்றிருப்பவர் தனக்கோடி புத்ர மருதபரணி.

இயக்குனர் பொறுப்பேற்றிருப்பவர் அஞ்சனா புத்ர கிரிஷ். இவர் தமிழில் சிம்பு நடித்த வானம் படத்தை இயக்கியவர். அத்துடன் தெலுங்கிலும் இந்தியிலும் பல வெற்றிப் படங்களை இயக்கிய முன்னனி இயக்குனர்.

இந்த கதையை திரைப்படமாக உருவாக்க இயக்குனர் கிரிஷ் கதையின் இயற்கை உண்மை குறையாமல் எடுக்க வேண்டும் என்பதற்காக மதிய பிரதேசம், ஜார்ஜியா, மொராக்கோ போன்ற இடங்களுக்கு சென்று உண்மையான அரண்மனைகளில் படமாக்கினார். அந்த காட்சிகள் திரையில் பார்பதற்கு பிரமாண்டமாக இருக்கும். ஆயிரக்கணக்கான குதிரைப்படைகளையும் , பல்லாயிரக்கணக்கில் காலாட்படையும் மற்றும் பல குறுநில மன்னர்கள், அரசவை சேனைகளும், தளபதிகள், மந்திரிகள் என்று எண்ணிலடங்கா வீரர்களையும் வைத்து உருவாக்கி உள்ள இந்த படத்தை பார்க்கும் போது நேரில் சென்று போர்க்களத்தை பார்ப்பது போல் இருக்கும். சுமார் 150 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக இந்த படம் உருவாகி உள்ளது.

பாகுபலி படத்தை போன்ற பிரமாண்டமும், ஆங்கிலப் படத்திற்கு நிகரான பிரமிப்பும் கண்களை மிரட்டும் அதிநவீன கிராபிக்ஸும் கலந்த கலவை தான் இந்த கெளதமி புத்ர சாதகர்ணி திரைப்படம் என்றார் படத்தின் வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருக்கும் தனக்கோடி புத்ர மருதபரணி.

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
kaala -rajini stills
காலா ஸ்டில்கள் இனி சுதந்திரமாக வருமா?

Close