ஹிட்டாகப் போகும் ஹெட் மாஸ்டரின் கதை! இயக்குனரான மாணவன் தந்த கவுரவம்!

தஞ்சாவூரிலிருக்கும் ஆம்லாபட்டு என்ற ஒரு குக்கிராமம். அந்த கிராமத்தில் இன்று வீட்டுக்கு ஒருவர் பட்டதாரி. வீடு வீடாக செல்வந்தர்கள். அந்த கிராமத்தில் படித்து வளர்ந்த பலர் உலகம் முழுக்க வெவ்வேறு துறைகளில் தலைமை பொறுப்பில்! இவ்வளவுக்கும் காரணம் ஒரே ஒரு தலைமை ஆசிரியர். அவதான் மிஸ்டர் சாரங்கன். அந்த ஆசிரியரின் கதையையே படமாக எடுத்து, அதை அவருக்கே சமர்ப்பிக்க வேண்டும் என்று அவரது ஸ்டூடன்ட் நினைத்தால் என்னாகும்? அதுதான் ‘பள்ளிப்பருவத்திலே’ படம் உருவான கதை!

பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வெண்பா நடிக்கும் இந்தப் ‘பள்ளிப் பருவத்திலே’ படத்தை வாசுதேவ் பாஸ்கர் இயக்கியிருக்கிறார்.

இந்தக் கதையை வாத்தியார் சாரங்கனாக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிகுமாரிடம் சொன்னபோது அவர் சொன்ன வார்த்தைகள்தான் மிக மிக முக்கியமானது. இப்படியொரு ஆசிரியர் இருந்திருக்காரா? இந்த கதைக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். அதே வார்த்தைகளை படத்தில் சில பாடல்களை எழுதியிருக்கும் வைரமுத்துவும் சொல்ல… அந்தரத்தில் மிதக்கவே ஆரம்பித்துவிட்டார் வாசுதேவ் பாஸ்கர்.

ஒரு ஆச்சர்யம் என்ன தெரியுமா? திரைக்கு வந்த படங்களையே வாங்கத் தயங்கும் சேட்டிலைட் ரைட்ஸ் நெருக்கடி காலத்தில், இப்படத்தின் கதையை சொல்லியே ஷுட்டிங் போவதற்கு முன்பே சன் தொலைக்காட்சிக்கு படத்தை விற்றுவிட்டாராம் வாசுதேவ் பாஸ்கர். அந்த ஒரு அங்கீகாரமே இந்தப்படத்தின் பெருமையை சொல்லும் என்கிறார் சவுண்டாக!

விட்டால் நமக்கும் ஸ்கூல் யூனிபார்ம் கொடுத்து போடச் சொல்லிவிடுவார்களோ?

No Comments

Leave a Reply

Facebook

Follow Us on Twitter