நயன்தாரா ஏமாற்றுவார் என்றுதான் நினைத்தார்! ஆனால்?

தன் ரூட்டை சரியாக தீர்மானித்துவிட்டார் நயன்தாரா! இல்லையென்றால் அறம் மாதிரி சமூக நோக்குள்ள படங்களை தேர்வு செய்கிற அறிவு வருமா? நயன்தாராவின் மைல் கல்லில் அறம் முக்கியமான படமாக மட்டுமல்ல, பணம் குவிக்கும் படமாகவும் இருக்கக் கூடும். ஏன்?

சும்மாவே நயன்தாராவுக்கென ஒரு ஸ்டைல் உண்டு. கொஞ்சம் சுலபமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு திமிர் உண்டு. அந்த திமிரை அறம் கரெக்டாக கையாண்டிருப்பது போலதான் இருக்கிறது போஸ்டர்களும், டிரெய்லரும். கலெக்டராக இப்படத்தில் நடித்திருக்கிறார் நயன்தாரா. இந்தப்படம் அவருக்கு வந்து சேர்ந்ததே தனி கதை.

கத்தி படத்தின் மூலம் நாடறியப்பட்டவர் மீஞ்சூர் கோபி. கதை திருட்டு விவகாரத்தில் கண்ணீர் வடித்த கோபியின் நியாயத்தை விவாதிக்காத பத்திரிகைகளே இல்லை. அந்தளவுக்கு முருகதாசின் கையாடல் விஷயத்தை கவனமாக வெளிக் கொண்டு வந்தன பத்திரிகைகள். அந்த நேரத்தில், இது நிஜமா இருக்குமோ என்கிற டவுட்டுடன் இவரை வரச்சொல்லி கதை கேட்டிருக்கிறார் அறம் படத்தின் எக்சியூட்டிவ் தயாரிப்பாளர் சவுந்தர் சற்குணம். திறமையுள்ளவர் கோபி என்பதை அறிந்தபின், இந்த விஷயத்தை அப்படியே நயன்தாரா காதில் போட்டாராம். அப்புறம் நடந்ததெல்லாம் மிராக்கிள்.

அதை கோபி நைனார் என்கிற மீஞ்சுர் கோபியே சொல்கிறார் கேளுங்கள்.

நயன்தாரா வந்தார். நான் கதை சொல்ல ஆரம்பித்தேன். 10 நிமிஷம் முடிவதற்குள் இந்த கதை பிடிச்சுருக்கு. நாம நிச்சயம் பண்றோம் என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார். எனக்கு நம்பிக்கையே இல்லை. ஏனென்றால் சினிமாவில் இதற்கு முன் எனக்கு நிறைய அனுபவங்கள் உண்டு. வழக்கம் போல இதுவும் இல்லை என்று நினைத்திருந்தேன். ஆனால் என் எண்ணத்தை தவிடு பொடியாக்கியது அடுத்தடுத்த நிகழ்வுகள். முறையாக அட்வான்ஸ் கொடுத்தார்கள். அக்ரிமென்ட் போடப்பட்டது. ஆபிஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கப்புறம்தான் எனக்கு நம்பிக்கையே வந்தது.

இப்படி சினிமாவில் ஏமாந்தே பழக்கப்பட்ட மீஞ்சூர் கோபி, இயக்குனர் ஆன கதையை விவரித்தார்.

தனக்கு எது சரி என்பதை தேர்ந்தெடுக்கிற விஷயத்தில் நயன்தாராவின் போல்ட், ‘நட்டு போல்டுக்கு’ கூட வராது. நயன்தாராவின் அறம் வெல்லட்டும்… அப்படி வென்றால் கோபி நயினார் மூலமாக இன்னும் நல்ல நல்ல படங்கள் திரைக்கு வரும்!

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Rajini-Modi
மோடி வரவேற்பு கூட்டத்தில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி!

தமிழக பா.ஜ.கவின் தப்புத்தாளத்தை அண்மையில் கை கொட்டி ரசித்தது மக்கள் மனசு. சும்மா கிடந்த தவிலை தூக்கி தூக்கி அடித்ததால் மெர்சல் படம் செம ஹிட். இந்த...

Close