ஜி.வி.பிரகாஷ் அதிர்ச்சி! கடைசியில் இப்படி பண்ணிட்டாரே விஜய்?

விஜய் நன்றாக பாடுவார் என்பது தெரியும். ஆனால் அதை இன்னும் ஸ்வீட் ஆக்கியவர் ஜி.வி.பிரகாஷ்தான். விஜய் படங்களுக்கு அவர் பாட்டுப் போடும்போதெல்லாம் அதில் ஒரு பாட்டை விஜய்யே பாடுவார். விஜய்யின் குளோஸ் அப் சிரிப்பு குழுவில், வெகு சீக்கிரத்தில் நுழைந்து ரொம்ப குளோஸ் ஆக சிரித்துக் கொண்டிருந்தவர் ஜி.வி.பிரகாஷ். அவருக்கு ஜலதோஷம் பிடித்தால், இவருக்கு தும்மல் வரும் என்கிற அளவுக்கு, சினிமாவை தாண்டியும் ஜெல்லானதுதான் இருவரது நட்பும்.

ஒரு ஆங்கில நாளிதழில் இவருக்கு தரப்பட வேண்டிய சிறந்த நடிகர் விருதை, வேறொருவருக்கு கொடுத்துவிட்டார்கள் என்பதை அறிந்ததும், பகிரங்கமாக அந்த ஆங்கில நாளிதழை ட்விட்டரில் போட்டு வெளுத்தவர் ஜி.வி.பிரகாஷ். இந்த பொழப்பு பொழக்கறதுக்கு வேற வேலை செய்யலாம்… என்று அவர் அந்த ஆங்கில நாளிதழுக்கு கொடுத்த அடியை, பேரதிர்ச்சியோடு கவனித்தது பிரஸ் வட்டாரம். அதற்கப்புறம் அந்த நாளிதழில் துணுக்கு செய்தியில் கூட வருவதில்லை ஜி.வி.

இப்படியெல்லாம் அல்லும் பகலும் விஜய்க்காக பாடுபட்டவருக்கு, குண்டூசியால் ஒரே குத்து! குத்தியவர் அட்லீ.

விஜய்யை வைத்து தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக அவர் இயக்கும் படத்தில், ஜி.வி.பிரகாஷ் இல்லை. அப்புறம்…? மியூசிக் நம்ம ஏ.ஆர்.ரஹ்மான்!

நட்பு பெருசா? ஹிட்டு பெருசா? இரண்டையும் தாண்டி நிற்கிற ஜி.வி.பிரகாஷின் ஏமாற்றம்தான் பெருசு!

To listen audio click below:-

 

No Comments

Leave a Reply

Facebook

Follow Us on Twitter