கடைசியில இப்படி ட்விஸ்ட் கொடுத்துட்டாரே கவுதம் மேனன்?

ஒரே ஸ்டைலில் படங்களை எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தாலும், அதையும் மூச்சு முட்ட ரசிக்கிற இளைஞர் கூட்டம், கவுதம் மேனனை ஹாட் லிஸ்ட்டில்தான் வைத்திருக்கிறது எப்பவும்! இப்படி இளைஞர்களின் பல்ஸ் பிடித்து அடிக்கும் ரகசியத்தை புரிந்து கொண்ட அவரும் தன் ஸ்டைலை மாற்றிக் கொள்வதாக இல்லை. ஆனால் படத்தில் வேண்டுமானால் அவர் மாறாமலிருக்கலாம். இப்படியும் படம் தயாரிக்கலாம் என்கிற வித்தையில் மனுஷன் எப்பவும் கில்லாடிதான்!

அவரது ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் விளம்பரங்களில் கடைசிவரை படத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையோ, அல்லது தனிப்பட்ட ஒருவரின் பெயரையோ போடாமல் படத்தை வெளியிட்ட முதல் சினிமாக்காரர் இவர்தான். ரசிகர்களை குழப்பும் இந்த ஸ்டைல் அவருக்கு ருசிக்க ஆரம்பித்ததுதான் விபரீதம். தொடர்ந்து அதே விபரீத முயற்சியில் இறங்கிவிட்டார் அவர். ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதையே சொல்லாமல், படப்பிடிப்பையே முடிக்கும் நேரத்தை நெருங்கிவிட்டார் அவர்.

படத்தின் ஹீரோ தனுஷிடம், “நான் யார்னு சொல்ல மாட்டேன். நீங்களே கண்டு பிடிங்க” என்று கூறி சில ட்யூன்களை காட்ட… இது ரஹ்மானாதான் இருக்கும். அல்லது ஹாரிஸ்… என்று சமாதானம் ஆனார் அவர். நிஜத்தில் ரஹ்மானும் இல்லை. ஹாரிஸ்சும் இல்லையாம். அந்த வியத்தகு ட்யூன்களை போட்டவர், சாட்சாத் கவுதம்மேனன்தான்! இந்தப்படத்தில் இரண்டு பாடல்களை கவுதம் மேனனே உருவாக்கியிருக்கிறாராம்.

இந்த பேரதிர்ச்சியிலிருந்து விடுபட்டாலும், ரஹ்மான், ஹாரிஸ்னு நினைக்க விட்டு இப்படி சிக்கனமா கதையை முடிச்சுட்டாரே என்கிற நறநறப்பில் இருக்கிறது திருவாளர் தனுஷின் திருமுகம்.

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter