காதில் போட்டுக் கொள்ளாத கவுதம் டென்ஷனில் அஜீத்!

எப்பவுமே கன ஜோராக படப்பிடிப்பை துவங்கும் கவுதம் மேனன், பாதிக்கு மேல் அப்படம் வளர்ந்ததும், இரை தின்ன பாம்பு போல நெளிய ஆரம்பித்துவிடுவாராம். அதற்கப்புறம் நடப்பதெல்லாம் சர்வ ஸ்லோ… என்கிறார்கள் அவரோடு பணியாற்றியவர்கள். அஜீத் படத்திற்கும் அதே நிலைமை வந்ததுதான் யாராலும் ஜீரணிக்க முடியாத‘ ஐயோடா… ’

தீபாவளிக்கு படத்தை வெளியிட்டு விடணும் என்ற கண்டிஷனோடுதான் அவரை ஒப்பந்தமே செய்தார் ஏ.எம்.ரத்னம். இப்போது போகிற வேகம் அப்படி தெரியவில்லையாம். பிரச்சனை அஜீத் வரைக்கும் போயிருக்கிறது. ‘பொங்கலுக்காவது படத்தை கொண்டு வர முடியுமா பாருங்க. முதல்ல இந்த படத்தை முடிச்சுட்டு அடுத்த படத்தை பற்றி அறிவிக்கலாம். பேசலாம். அதுவரைக்கும் பொறுமை ப்ளீஸ்’ என்றெல்லாம் அட்வைசித்தாராம் அஜீத். இப்போது மட்டுமல்ல, இந்த படத்தை துவங்குவதற்கு முன்பு கூட கவுதம் மேனனை அழைத்து உங்களை நம்பி நான் வாக்குறுதி கொடுத்திருக்கேன். அதை கெடுத்துடாதீங்க’ என்றெல்லாம் கேட்டுக் கொண்டவர் அஜீத். ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்கிறவரா கவுதம்? அடுத்து சிம்புவின் படம் எப்போது? விக்ரம் கால்ஷீட் எப்போது? என்றெல்லாம் மீடியாவில் தகவலை கசிய விட்டுக் கொண்டிருக்கிறார்.

இதனால் ரண சூட்டில் இருக்கிறது ரத்னம் வட்டாரம்!

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
vennila veedu
‘ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரைக்கும் வாடியிருக்குமாம் வைபிரண்ட்!’

‘ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரைக்கும் வாடியிருக்குமாம் வைபிரண்ட்!’ ‘படம் எடுக்கறது பெரிசு இல்ல. அதை ரிலீஸ் பண்றீங்க பாரு, அங்க ஒடியும் முதுகெலும்பு!’ ஒட்டுமொத்த...

Close