ரஜினி, கமல், விஷால் தலைமையிலான நட்சத்திர கலைவிழா! மலேசியாவில் கடும் எதிர்ப்பு?

புத்தாண்டின் முதல் வாரத்தில் ரஜினி, கமல், விஜய், சூர்யா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு முறையும் கலெக்ஷன் ஐடியா தோன்றியவுடன், சினிமா சங்கங்கள் ‘டிக்’ அடிக்கும் முதல் நாடு மலேசியாதான். இன்னும் எத்னை முறை வந்தாலும் அள்ளிக் கொடுக்க நாங்க ரெடி என்பது போல, இந்த முறையும் டிக்கெட் கவுன்ட்டர் ஓப்பன் பண்ணிய இரண்டு மணி நேரத்தில் 15 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.

இந்த நிலையில்தான் மலேசியாவின் நாம் தமிழர் இயக்கம் தனது எரிச்சலை பகிரங்கமாக வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மு.அ.கலைமுகிலன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்தான் அவ்வளவு கொந்தளிப்பும் குமுறலும். இங்கு மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கு சொந்தமாக ஒரு மண்டபம் இல்லை. ஏதாவது விசேஷம் என்றால் சீனர்களின் மண்டபத்தைதான் வாடகைக்கு அமர்த்த வேண்டியிருக்கிறது. நமக்கென ஒரு மண்டபம் கட்டுவதற்கு முயற்சித்தால், அதற்கு நன்கொடை தர யோசிக்கிற மலேசிய தமிழர்கள், நடிகர் நடிகைகள் என்றால் கொட்டிக் கொடுப்பது வேதனையிலும் வேதனை.

இதே கட்டிடத்திற்கு நீங்கள் நிதி கொடுங்கள் என்று தமிழ்ப்பட நடிகர்களிடம் கேட்டால் கொடுப்பார்களா? உங்கள் சங்க கட்டிடத்தை கட்டுவதற்கு நீங்கள்தானே பணம் போட வேண்டும்? ஏன் எங்கள் நாட்டிலிருக்கும் தமிழர்களை சுரண்டுகிறீர்கள்? ரஜினி, கமல், அஜீத், விஜய் எல்லாரும் கோடி கோடியாக சம்பளம் வாங்குகிறார்கள். அந்தப்பணத்தில் கட்டலாமே? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

வழக்கம் போல இந்த அறிக்கை வந்த தாளை வேர்கடலை மடிக்கும் பொட்டலமாக்கிக் கொண்டிருக்கிறான் தமிழன்!

நம்ம பெருமையெல்லாம் வெறும் வரலாறுதான்டீய்….!

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
TR
விஷால் என்ன லாடு லபக்கு தாஸா? விநியோகஸ்தர் சங்கத் தேர்தல் பிரச்சாரத்தில் டி.ஆர். எரிச்சல்!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டி ஏ அருள்பதிக்கு கலைப்புலி தாணு உள்ளிட்ட முன்னணி தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள்...

Close