தடையாவது ஒண்ணாவது… மெர்சல் தீபாவளிக்கு வரும்! விஜய் கோபம்!

நடிகர் சங்கமும், தியேட்டர் அதிபர்கள் சங்கமும் ஆளுக்கொரு திசையில் முறுக்கிக் கொண்டு நிற்பதால், சினிமா தனக்குத் தானே மொட்டை அடிக்கிற கண்டிஷனில் இருக்கிறது. தியேட்டர்கள் பப்பரக்கா என்று திறந்து கிடக்கிறது. ஆனால், ‘ஒரு படத்தையும் ரிலீஸ் பண்ண மாட்டோம்’ என்று அறிவித்திருக்கிறார் விஷால். சரி… தயாரிப்பாளர் சங்கம் படங்களை ரிலீஸ் பண்ணும்போது அவர்கள் தியேட்டரை மூடினால் என்ன செய்வாராம்? இப்படி ஒற்றுமையில் பிளேடு போட்டு கதற விடும் இவ்விரு சங்கங்களால், முன்னணி படமான மெர்சலுக்கே குடைச்சல்.

வரும் தீபாவளியிலிருந்து ஸ்டிரைக் என்கிற முடிவை தியேட்டர் சங்கம் மாற்றிக் கொள்ளும். ஏனென்றால், இந்த பண்டிகை கால அறுவடையை பகைத்துக் கொள்கிற தைரியம் தியேட்டர்காரர்களுக்கு வரவே வராது. நிஜம் அப்படியிருக்க… அரசு தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றால் தீபாவளிக்கு எந்த படங்களும் வராது என்று முழங்கிக் கொண்டிருக்கிறாராம் விஷால்.

இந்த விஷயம் அப்படியே விஜய் காதுக்கும் போக… யார் தடுத்தாலும் மெர்சல் தீபாவளிக்கு வரும். அதற்கப்புறம் வர்ற விளைவுகளை சந்திக்க தயார் என்று கூறிவிட்டாராம்.

ஒற்றுமை இல்லாத போராட்டங்கள், உருப்படாமல் போகும் என்பதற்கு விரைவில் ஒரு உதாரணம் கண்ணெதிரே நிகழப் போகிறது.

1 Comment

  1. Logeshwar says:

    Vijay got paid around 40c? may be more..All theatre owners and Audience will be losers this deepawali. Mersal flop arasan will beat the vivegam flop record. Only winners are Ajit and Vijay. All the rest are losers.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
santhanam
வீடு புகுந்து தாக்கிய சந்தானம்! ரத்தகளறியான கொடுக்கல் வாங்கல்!

Close