இனிமே டைரக்ஷன் பண்ண வேண்டாம்! ரஜினி அட்வைசால் தனுஷ் ஷாக்!

இந்தப்படத்தை ரஜினி சார் பார்த்துட்டு நாலு வார்த்தை நல்லதா சொன்னா, அதையே விளம்பரப்படுத்தி இன்னும் கொஞ்சம் கூட்டம் சேர்க்கலாம் என்று கணக்குப் போடும் பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ரஜினியின் அப்பாயின்ட்மென்டுக்காக அலையோ அலையென அலைவது இன்று நேற்று சமாச்சாரமல்ல. ஆனால் தனுஷுக்கு அந்த கஷ்டமெல்லாம் வேண்டாம். மருமகன் இயக்கியிருக்கும் படத்தை மாமனார் பார்த்தாக வேண்டுமல்லவா?

அப்படியொரு சுபயோக சுப தினத்தில் தனுஷ் இயக்கிய ‘பா.பாண்டி’ படம் ரஜினிக்கு திரையிடப்பட்டது. ராஜ்கிரண், சின்ன வயசு ராஜ்கிரணாக தனுஷ், மடோனா, ரேவதி ஆகியோர் நடித்திருக்கும் இப்படம், ‘ஐம்பது வயசுக்கு மேல் இருக்கும் பெரியவர்கள் உடம்பில் ரத்தம் இருக்கும்போதே சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் இறுதிகாலத்தில் உங்களை கவனித்துக் கொள்ள ஒரு காக்கா குருவி கூட வராது’ என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறது. முழு படத்தையும் பார்த்து பிரமித்துப் போன ரஜினி, அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டாராம் தனுஷை.

“நீங்க டைரக்ட் பண்ணியிருக்கிற இந்தப்படத்தின் கருத்தும், திரைக்கதையோட்டமும், ஆடியன்சை ஈர்க்கிற யுக்தியும் இதற்கப்புறம் நீங்க இயக்கப் போகிற படத்தில் அமையுமான்னு தெரியாது. உங்களுடைய பெயரை இன்னும் பல வருஷங்களுக்கு சொல்லப் போகும் அழுத்தமான படைப்பு இது. தனுஷ் ஒரு படம் இயக்கினார். பிரமாதம்… அற்புதம்…னு ஜனங்க சொல்லட்டும். அடுத்தடுத்து படங்களை இயக்கி இந்த நல்ல பெயரை விட்றாதீங்க” என்றாராம்.

சூப்பர் ஸ்டாரிடமிருந்து இப்படியொரு பாராட்டா என்று கிர்றடித்துப் போய் கிடக்கிறார் தனுஷ்!

2 Comments

  1. Kamal says:

    All the Best Dhanush

  2. அசோக் says:

    இனி தனுஷ் தான் தல தளபதி
    வாழ்த்துக்கள்

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
thondan samuthirakkani
78 நாட்டு மாடுகளின் பெயர்! விடாமல் முழங்கிய சமுத்திரக்கனி!

Close