ரஜினி விஷயத்துல ஏமாந்தாச்சு! சிவகார்த்திகேயன் விஷயத்துல விடக்கூடாது!

பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியனுக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் இடையே இருக்கும் பிரண்ட்ஷிப் அரசல் புரசலாக அறிந்த தகவல்தான். அந்த நம்பிக்கையில் லிங்கா விவகாரத்தில் அவரது உதவியை நாடினார் ரஜினி. ஆனால் ரஜினியின் நம்பிக்கை மீது நின்று நர்த்தனம் ஆடிவிட்டது திருப்பூராரின் தில்லுமுல்லு. இவர் ஒன்று சொல்ல, பாதிக்கப்பட்டவர்கள் வேறொன்று சொல்ல, அமைதியாக முடிய வேண்டிய பிரச்சனை அதற்கப்புறமும் குய்யோ முய்யோ ஆனது. அப்புறமென்ன…? ரஜினியின் குட் புக்கில் நறுக்கென கிழிக்கப்பட்ட தாள், வேறு யாருமல்ல. நம்ம திருப்பூரார்தான்.

இந்த மன சங்கடத்தில் வந்த ஸ்ரீதேவியை, “போயிட்டு வாம்மா” என்று கூறிவிட்டார் இவர். ஒவ்வொரு ரஜினி படத்தையும் திருப்பூர் ஈரோடு கோவை பகுதிகளுக்காக வாங்கும் வழக்கமுள்ளவர், இந்த முறை கபாலி படத்தை கண்டுகொள்ளவேயில்லை. (கடைசி நேரத்தில் ஓடி வந்து கேட்டது வேறு விஷயம்) ரஜினி விஷயத்தில் ஏமாந்தது போல இன்னொரு முறை ஏமாறக் கூடாது என்று முடிவெடுத்திருக்கலாம்.

கலெக்ஷன் ஹீரோ என்ற நல்லப் பெயரை கடந்த எல்லா படங்களிலும் பெற்று, விறுவிறுவென முன்னேறிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தின் கோவை பகுதி விநியோக உரிமையை வாங்கியிருக்கிறாராம். ரெமோ படத்தை பொறுத்தவரை இவர்தான் முதல் விநியோகஸ்தர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இனி மற்ற ஏரியாக்கள் மளமளவென விற்பனையாகும். சந்தேகமில்லை!

No Comments

Leave a Reply

Facebook

Follow Us on Twitter