ரஜினி விஜய் சூர்யா மீது ரெட் புயல்! சேதாரத்திற்கு நிவாரணம் கேட்பதால் சிக்கல்?

கபாலிக்காக ரஜினி, பைரவா படத்திற்காக விஜய், சிங்கம் 3 படத்திற்காக சூர்யா, போகன் படத்திற்காக ஜெயம்ரவி, கத்தி சண்டை படத்திற்காக விஷால்! இந்த நால்வருக்கும் காபி பொடிக்கு பதிலாக மிளாகாய் பொடி போட்டு படு ஸ்டிராங்காக ஒரு ரோஷக்கார காபி தயாரித்துக் கொடுத்திருக்கிறது விநியோகஸ்தர் கூட்டமைப்பு. இன்று சென்னையில் நடந்த அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு, அவ்வளவு ரணகளம்!

மேலே சொன்ன படங்கள் எதுவுமே ஒடவில்லை. ஆனால் ஓடியதாக கூறி ஜனங்களை நம்ப வைக்கிறார்கள். எங்களுக்கு மேற்படி படங்களால் கடும் நஷ்டம். இந்த நஷ்டத்தை சரிகட்ட வில்லை என்றால், அந்த ஹீரோக்கள் படங்களுக்கு இனி வரும் காலங்களில் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம். இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். ஆனால் இதை வெளிப்படையாக அவர்கள் அறிவித்தால், அது சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், சங்கத்திற்குள்ளேயே ‘வச்சு செய்ய(?)’ திட்டமிட்டிருக்கிறார்களாம்.

இப்படியொரு முடிவை அவர்கள் எடுத்ததால் தயாரிப்பாளர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. எந்த படத்தை கொடுத்தாலும் நஷ்டம் நஷ்டம் என்று நஷ்டக்கணக்கை காட்டுவதே இவங்களுக்கு வேலையா போச்சு என்றும் ஆவேசப்படுகிறார்கள்.

ஆமா… சிங்கம் 3 வெற்றிக்காக அப்படத்தின் டைரக்டர் ஹரிக்கு ஃபார்சுனர் காரை பரிசாக அளித்தாரே சூர்யா. அந்த வீலின் காற்று இறங்குவதற்குள் இப்படியொரு சூறாவளியை கிளப்பிவிட்டால், யாருக்குதான்யா கோபம் வராது?

4 Comments

 1. அரவிந்த் says:

  சூப்பர்ஸ்டார், ராதிகா ஆப்தே, தன்ஷிகா நடிப்பில், ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த படம் கபாலி. இப்படம் கடந்த ஜூலை மாதம் 22 ம் தேதி உலகமெங்கும் வெளியானது.

  இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் இப்படம் தமிழகத்தில் நூறு நாட்களை கடந்து உள்ளது. இப்படத்தின் வசூலை பற்றி பல விதமான தகவல்கள் ஆரம்பத்தில் வந்து கொண்ட இருந்தன.

  இந்நிலையில் தற்போது வந்த தகவல் படி மொத்த நூறு நாட்களில் 270 கோடி ரூபாய் வசூல் அள்ளியுள்ளதாம். ஆந்திர , தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 30 கோடி ரூபாயும், தமிழ் நாட்டில் 80 கோடி ரூபாயும் , கர்நாடகவில் 20 கோடியும், கேரளாவில் 15 கோடியும் மற்ற மாநிலங்களில் 25 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 100 கோடி ரூபாயும் வசூலித்திருப்பதாக சொல்கிறார்கள். இதை வைத்து பார்க்கையில் 270 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது.

 2. Ajith says:

  தொடர்ந்து தோல்விப் படங்களாக அளிக்கிறார் என்று கூறி விஜய்க்கு தடை விதிக்க தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாம்.
  விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான புலி படம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு வெளியான தெறி ஓரளவு ஓடினாலும் பைரவா படம் படுதோல்வி என்கிறார்கள் வினியோகஸ்தர்கள். பைரவா படம் ரூ.100 கோடி வசூலை தாண்டியதே என்று கேட்டால் அது ஹீரோவின் இமேஜை காப்பாற்ற தயாரிப்பாளரும், ஹீரோவும் சேர்ந்து விட்ட புருடா என்று வினியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்

 3. சுந்தர் says:

  கபாலி படத்தின் மதுரை விநியோகஸ்தர், இம்பாலா தியேட்டர் உரிமையாளர் மணிவர்மா ஒரு வாட்ஸ் அப் ஆடியோவைப் பகிர்ந்துள்ளார்.

  அதில், “நான் மணிவர்மா, மதுரை மணி இம்பாலா மல்டிபிளக்ஸ் உரிமையாளர். திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் பதிவை சற்று முன் கேட்டேன். சின்ன மன வருத்தம். அதற்காகத்தான் இதைப் பதிவு செய்கிறேன்.

  ‘கபாலி’ படத்தின் 50 நாள், 100 நாள், 175 நாள், 200 நாள் இதெல்லாம் பொய்யான விளம்பரம் என சொல்லியிருந்தார்.’கபாலி’ படம் இன்று 217வது நாள், இன்று கூட மார்னிங் ஷோ 47 டிக்கெட் போயிருக்கு. படம் ரெகுலரா போயிட்டிருக்கு. நீங்க சொன்ன கருத்து தாணு சாரையும், ரஜினி சாரையும் சற்று களங்கப்படுத்துவது போலிருந்தது. நீங்களும் ஒரு வினியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்தான், நானும் ஒரு வினியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர். லாபம், நஷ்டம்கறது ஒரு தொழில்ல இருக்கிறது சகஜம்தான். குறிப்பிட்ட சிலரோட பேரைச் சொல்லி குரூப்புல பதிவு பண்றது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கு. ‘கபாலி’ படம் மிகப் பெரும் வெற்றிப் படம். மதுரை ஏரியாவில் எனக்கு பெரும் வெற்றியையும், லாபத்தையும் தந்த படம் ‘கபாலி’தான்,” எனக் கூறியுள்ளார்.

 4. வித்யா says:

  கபாலி’ படம் வெளிவந்து 200 நாட்கள் ஆகிவிட்டது. இன்றும் மதுரையில் உள்ள மணி இம்பாலா திரை அரங்கில் கபாலி ஓடி கொண்டு இருக்கிறது இப்படத்திற்கு நல்ல கூட்டம் வருவதாக கூறப்படுகின்றது.

  சமீபத்தில் கிடைத்த தகவலின்படி இப்படம் ரூ 600 கோடியை கடந்துவிட்டதாம். இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தியாவின் முன்னணி வர்த்தக இதழ் ஒன்று இப்படம் ரூ 677 கோடி வரை வசூல் செய்துவிட்டது என்று அறிக்கையிட்டுள்ளது.

  மேலும் இப் படத்தின் விளம்பரம், ஆடியோ, சாட்டிலைட் உரிமம் என அனைத்தும் இந்த வசூல் தொகைக்குள் அடங்கும் என கூறியுள்ளனர்.

  ஆக மொத்தத்தில், எப்படியும் 700 கோடியை கபாலி தொடும் என்றும் அப்படி ஒன்று நடந்தால் இந்திய சினிமா வரலாற்றையே அது புறட்டிப்போடும் என்றும் கூறப்படுகின்றது.

  ஆக மொத்தத்தில், எப்படியும் 700 கோடியை கபாலி தொடும் என்றும் அப்படி ஒன்று நடந்தால் இந்திய சினிமா வரலாற்றையே அது புறட்டிப்போடும் என்றும் கூறப்படுகின்றது.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Kamal Fans Association Secretary Arrested.
Kamal Fans Association Secretary Arrested.

https://www.youtube.com/watch?v=aJHSLc-frkE

Close