விடாமல் துரத்திய டைரக்டருக்கு ஷாக்! விஜய் சேதுபதி மனுஷனே இல்ல!

ஹிட்டோ, பிளாப்போ? டாப் டென் வரிசைக்குள் இருக்கிற ஹீரோக்களுக்கு கதை சொல்லி கால்ஷீட் வாங்குவதே ஒரு பாகுபலி எடுத்ததற்கு சமம்! அந்தளவுக்கு வருஷக்கணக்காக அலைய விடுவார்கள். பல வருஷ போராட்டத்திற்கு பிறகு எப்படியோ கதை கேட்க சம்மதிக்கும் சில ஹீரோக்கள் அப்படி கதை கேட்கும் ஸ்டைலையே விநோதமாக வைத்திருப்பார்கள். “கதைய பத்து நிமிஷத்துக்குள்ள சொல்லுங்க. பிடிச்சிருந்தா மேற்கொண்டு கேட்பேன். இல்லன்னா இல்லதான்” என்பார்கள். இரண்டரை மணி நேர படத்தை பத்து நிமிஷத்துல எப்படிய்யா சொல்வது என்று பேதியாகும் இயக்குனர்கள், எப்படியோ மென்று முழுங்கி அவரை இம்ரஸ் செய்வதற்குள், போன ஜென்மத்து பாவத்தையும் சேர்த்து அனுபவித்துவிடுவார்கள். இந்த ஏழு மலைகளை ஏறி கடந்துதான் பல இயக்குனர்கள் படம் பிடிக்கிறார்கள். (ஐயோ பாவம்)

சரி… விஷயத்துக்கு வருவோம். அப்படி பல வருஷங்கள் அலைந்து விஜய் சேதுபதிக்கு கதை சொல்லி அவரை இம்ப்ரஸ் பண்ணிவிட்டார் ஒரு டைரக்டர். கா…வில் ஆரம்பித்து ஸ்… ல் முடியும் பெயர் கொண்ட அந்த அறிமுக இயக்குனருக்கு விஜய் சேதுபதி கொடுத்த ட்ரீட்மென்ட்தான் பேரதிர்ச்சி.

“உங்க கதை பிரமாதமா இருக்கு. ஆனால் எனக்கு இப்போ இருக்கிற கமிட்மென்ட்ல உங்களுக்கு உடனே படம் பண்ணவும் முடியாது. ஆனால் உங்களை மாதிரி இயக்குனர்கள் இனிமேலும் காத்திருப்பது சினிமாவுக்கு நல்லதல்ல. அதனால் நானே ஒரு கோடி ரூபாய் உங்களுக்கு கொடுக்குறேன். சின்ன பட்ஜெட்ல புதுமுகத்தை வச்சு ஒரு படத்தை இயக்கிட்டு வாங்க. அந்த படத்தை நானே ரிலீஸ் பண்ணிக் கொடுக்கிறேன். அதுக்குள்ள நானும் என்னை ஃப்ரீ பண்ணி வச்சுக்குறேன். இன்னொரு படம் என்னோடு நீங்க இணைந்து பண்ணலாம்” என்றாராம்.

தமிழ்சினிமா வரலாற்றிலேயே இப்படியெல்லாம் நடந்ததில்லை. இப்படியொரு ஹீரோவை ‘மனுஷன்’ என்று சாதாரணமாக சொல்லிவிட முடியுமா என்ன? தெய்வம்… அல்லது அதுக்கும் மேல!

(தலைப்பை படித்துவிட்டு டர்…ராகியிருக்கும் விஜய் சேதுபதி ரசிகர்களே… இப்ப கூல் கூல்)

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Rajinikanth Satyanarayana
நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி! ரஜினியின் அண்ணன் போட்ட டூப்?

Close