டைரக்டர் ஷங்கரின் எரிச்சலுக்கு பா.ரஞ்சித் காரணமா?

இவன் உருப்படவே மாட்டான்னு நினைச்சேன். ஆனால் என்னை பிரமிக்க வச்சுட்டான் என்று டைரக்டர் பாலா, சசிகுமாரை வியந்தது அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் உலகத்தின் ஆச்சர்யங்களில் ஒன்று. அவ்வப்போது இப்படி குருவுக்கு இணையான சிஷ்யர்கள் வருவார்கள். வெல்வார்கள். இந்த கதையும் கிட்டதட்ட அப்படியொரு கதைதான்.

தனது அசிஸ்டென்டுகளில் சிலர் மீது மட்டும் கரிசனம் காட்டும் டைரக்டர் ஷங்கர், வேறு சிலர் மீது அவ்வளவு கரிசனம் காட்டாமல் போனதற்கு சாதிதான் காரணம் என்று தனி ஆவர்த்தனம் வாசிக்கிறது கோடம்பாக்கம். (ஐயே இது வேறயா?) குற்றம் 23 படம் வெளியான நேரத்தில் அப்படத்தை பார்த்து வியந்த டைரக்டர் ஷங்கர், தனது சிஷ்யன் அறிவழகனை பாராட்டி ஒரு ட்விட் போட்டார். அவ்வளவுதான்… படத்தின் கலெக்ஷன் தாறுமாறாக ஏறியது. படமும் ஹிட்.

அதற்கப்புறம் ஷங்கரின் சிஷ்யர்களில் ஒருவரான ஆடம் தாசன் இயக்கிய ‘பாம்பு சட்டை’ வெளிவந்தது. ரெவின்யூ சுமாராக இருந்தாலும், விமர்சகர்களால் ஆஹா ஓஹோ என கொண்டாடப்பட்டது. படம் வெளியான அடுத்த நாளே இப்படத்தை பார்த்து தனது பாராட்டுகளை வார்த்தைகளாக வெளிப்படுத்தினார் கபாலி புகழ் பா.ரஞ்சித்.

பா.ரஞ்சித் படத்தை பார்ப்பதற்கு முன்பே தனது பாம்பு சட்டை படத்தை பார்க்க ஷங்கரை அழைத்தாராம் ஆடம். என்னொன்னவோ காரணங்களை சொல்லி தள்ளிப் போட்ட ஷங்கர், பா-ரஞ்சித் கருத்து சொன்னதும் படம் பார்க்கும் எண்ணத்தையே கைவிட்டு விட்டார்.

கபாலிக்கு பின் சாதி அரசியலை முன் வைத்து கருத்துகளை பேசி வரும் பா.ரஞ்சித், ஆடம் படத்தை பார்க்க விரும்பியது கூட அப்படியொரு பிணைப்பின் காரணமாகதான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். ஷங்கர் இப்படத்தை பார்க்காமல் விட்டதற்கும் அப்படியொரு தள்ளிவைக்கும்(?) மனநிலைதான் என்று கொதிக்கிறது அதே கோடம்பாக்கம்.

மனசிருக்கும் மனுசனுக்கு மதிப்பிருக்காது. மதிப்பிருக்கும் மனுசனுக்கு மனசிருக்காது. இரண்டும் இருந்திருக்க வேண்டிய ஷங்கர், ஆடம் விஷயத்தில் செய்தது பச்சை துரோகம் அன்றி வேறென்ன?

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
jipran
ஜிப்ரானுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

Close