சங்கத்தில் பீட்டா உறுப்பினர்கள் இல்லை! விஷாலை அறிவிக்க சொல்லி நெருக்கடி!


மாணவர் எழுச்சிக்கு ஒருபோதும் இடையூறாக இருக்கக் கூடாது என்று கூறிய நடிகர் சங்கம், மெரீனாவிலேயே இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருக்கலாம் என்கிற கருத்துகள் ஒரு புறம் இருக்கிறது. அதை தொடர்ந்து இந்த போராட்டம் தொடர்பான புகைப்படங்களையோ, நேரடி செய்திகளையோ வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் நடிகர் சங்கத் தலைவர் நாசர். மக்களின் கவனத்தை நமது பக்கம் திசை திருப்ப வேண்டாம் என்று கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். இப்படி மிக மிக கவனமாக கண்ணாடி பாத்திரம் போல கையாள வேண்டிய விஷயம் இது என்பதை சற்று தாமதமாக உணர்ந்து கொண்டிருக்கிறது நாசர் விஷால் தலைமையிலான நடிகர் சங்கம்.

இந்த நிலையில், பீட்டா அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நடிகர் நடிகைகளே இங்கும் வந்து இரட்டை வேடம் போடுவது சரியல்ல என்று எண்ணிய ‘தமிழ்திரைப்பட கலாச்சார பாதுகாப்புக் குழு’ இன்று இயக்குனர் சேரன் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி தலைமையில் நடிகர் சங்கத்திற்கு சென்று விஷாலிடம் ஒரு மனு அளித்தது. ரஜினிகாந்த், அஜீத் மற்றும் முன்னணி ஹீரோக்களின் முன்னிலையில் அளிக்கப்பட்ட இந்த மனுவில், நான்கு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

1. பீட்டா அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நடிகர் நடிகைகளை அந்த அமைப்பிலிருந்து வெளியேற நடிகர் சங்கம் உத்தரவிட வேண்டும்.

2. அப்படி நடிகர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்காத நடிகர் நடிகைகளை உடனடியாக சங்கத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்.

2. அப்படி வெளியேறாத நடிகர் நடிகைகளின் விபரங்கள் பிற்காலத்தில் தெரிய வந்தால், அவர்களுக்கு தொழில் ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது.

3. தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் என்ற பெயரை ‘தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம்’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

மனுவை நேரில் அளித்த சேரன், “எங்கள் அமைப்பில் பீட்டா உறுப்பினர்கள் யாரும் இல்லை” என்று விஷால் அறிவிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இன்று மவுன உண்ணாவிரத பந்தலில் இந்த மனு அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Comment

  1. Tamilan says:

    What is jallikattu fame Arya, Peeta Trisha, Peeta Vishal – all these three actors movies should be boycotted in future by true manamulla tamils.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Vishal Makes Tension To Sasikala.
Vishal Makes Tension To Sasikala.

https://youtu.be/TgWEWBUJ7yU

Close