ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம்! அஜீத்துக்கு வலைவீசும் இயக்குனர்?

அஜீத் விஜய் மாதிரியான பெரிய நடிகர்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தால் போதும்! கையில் பரம் பைசா இல்லாவிட்டாலும், அந்த பரமாத்வுக்கே சவால் விடலாம்!

“படத்தை நம்ம பேனர்ல எடுக்கலாம்… அதுக்கு இஷ்டமில்லயா? மொத்த படத்துக்கும் நானே பைனான்ஸ் தர்றேன்” என்று வரிசையில் நின்று வாழை இலை விருந்து வைக்கும் ஒரு கூட்டம். நார் இல்லாமலே இப்படி பூ கட்டலாம் என்பதை தெரிந்து வைத்திருக்கும் பலர், “அண்ணே… தலைவா… கடவுளே… தெய்வமே…” என்று இவ்விருவருக்கும் ஜால்ரா தட்டிக் கொண்டிருக்கிறார்கள். இனியும் தட்டுவார்கள்.

போகட்டும்… நாம் சொல்ல வந்தது வேறொரு விஷயம்.

அப்படியொரு அந்தஸ்திலிருக்கும் அஜீத்தை மொத்தமாக விலை பேசி வருகிறாராம் டைரக்டர் விக்னேஷ் சிவன். அஜீத்தை அணுகிய அவர், “சார்… நான் இயக்குகிற படத்தில் நீங்க நடிக்கணும். அந்த படத்தை நயன்தாராவே தயாரிப்பாங்க. உங்க சம்பளம் ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய். 45 நாட்கள் கால்ஷீட் கொடுங்க. அதையும் தாண்டி போனால் கூட அந்தந்த தினத்திற்கு ஒரு கோடி எக்ஸ்ட்ரா” என்றாராம்.

அஜீத்திற்கு, வேணும் வேணும் என்கிற அளவுக்கு சம்பளம் கொடுக்கிற இடத்தில் நயன்தாரா இருக்கிறார் என்பதே பெருமைதான். ஒரு பெண், அதுவும் தன்னந்தனியாக வந்து இந்த இன்டஸ்ட்ரியை ரூல் பண்ணுகிற ஆளுமைக்கு ஒரு தனி பாராட்டு. அதே நேரத்தில், கதையை மட்டும் நம்பாமல் தினம் ஒரு கோடி என்று அஜீத்தை விலை பேசும் விக்னேஷ் சிவனை எந்த அட்டவணையில் வைப்பது.

காதும்மா… எல்லாம் நீங்க கொடுக்கிற அசால்ட்டு!

 

1 Comment

  1. Vijay says:

    Media illana ajith apdinra oru suyanalavathi enro sethu irupan

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
7 NAATKAL – First Motion Poster| Shaktivel Vasu | Nikesha Patel | Ganesh Venkatraman
7 NAATKAL – First Motion Poster| Shaktivel Vasu | Nikesha Patel | Ganesh Venkatraman

Close