ராஜ்கிரண் ஹீரோ! டைரக்டர் ஆனார் தனுஷ்! எல்லாம் பூர்வ ஜென்ம கடன்?

மல்லையா வைத்த கடனுக்கும், மாணவர்கள் பேங்கில் வைத்த கடனுக்கும் இருக்கிற வித்தியாசத்தை ‘டேப்’ கொண்டு அளந்தால், அளப்பதற்கு இமயமலை ஹைட்டுக்கு ஒரு இஞ்ச் டேப் வேண்டும்! அதுவே நன்றிக்கடன் என்றால் அதுக்கும் மேல ஒரு மலை தேவைப்படும்! அப்படியொரு நன்றிக்கடனைதான் அடி மனசிலிருந்து செலுத்தியிருக்கிறார் தனுஷ்.

பல வருஷங்களாகவே தனுஷுக்குள் ஒரு டைரக்டர் விழித்துக் கொண்டு காத்திருப்பது அவரது பேட்டிகளை பின் தொடர்பவர்களுக்கு புரியும். “நல்ல டைம் வரட்டும். இன்னும் கத்துகிட்டுதான் இருக்கேன்” என்று கூறிவந்த தனுஷுக்கு அந்த நல்ல நேரம் வந்தேவிட்டது. தனது கதைக்கு யார் ஹீரோ என்கிற குழப்பம் அவர் மனதில் இல்லவே இல்லை. ஒட்டுமொத்த உருவமாக வந்து நின்றவர் ராஜ்கிரண்தான்.

கஸ்தூரி ராஜா கிருஷ்ண மூர்த்தியாக இருந்த காலத்திலேயே அவருக்கு ஆதரவளித்தவர் இந்த ராஜ்கிரண்தான். ‘ராசாவின் மனசிலே’ படத்தை கஸ்தூரி ராஜாவுக்கு கொடுத்து அவரை டைரக்டர் ஆக்கிய பெருமை ராஜ்கிரணுக்கு உண்டு. அந்த பழசையெல்லாம் இப்போது நினைத்துப்பார்த்த தனுஷ், “என் குடும்பத்துக்கு நீங்க பெரிய வழிகாட்டியா இருந்திருக்கீங்க. அப்பாவை எப்படி டைரக்டர் ஆக்கினீங்களோ, அதே பெருமையை அவரது மகனாகிய எனக்கும் தரணும்” என்றாராம் தனுஷ்.

இந்த அப்ரோச் யாருக்குதான் பிடிக்காமல் போகாது? மனம் நெகிழ்ந்த ராஜ்கிரண், “எந்த தேதியிலிருந்து எத்தனை நாள் கால்ஷீட் வேணும். அதை மட்டும் சொல்லுங்க” என்றாராம். இரண்டு கோடி சம்பளம் பேசி பெரிய அட்வான்ஸ் தொகை ஒன்றையும் அவர் கையில் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் தனுஷ்.

ராஜ்கிரண் எந்த தேதி என்று கேட்டாரல்லவா? நாளைக்கே, அதாவது செப்டம்பர் 7 ந் தேதியே சென்னையில் ஷுட்டிங் ஆரம்பிக்கிறது. அப்ப வடசென்னை? அதுக்கு முப்பது நாள் லீவு விட்டுவிட்டாராம் தனுஷ்!

வழக்கம் போல இந்த செய்தியும் நமது நியூதமிழ்சினிமா.காம் இணையதளத்தின் எக்ஸ்க்ளூசிவ்தான்! அதை வேற தனியா சொல்லணுமாக்கும்?

To listen audio click below :-

 

No Comments

Leave a Reply

Facebook

Follow Us on Twitter