சவுந்தர்யாவுக்கு தனுஷ் முழு நேர ஹெல்ப்! கதை திரைக்கதை வசனமும் அவரே!

ஆல் இன் ஆல் அழகுராஜாவாகிவிட்டார் தனுஷ். இந்தி மட்டுமல்ல, விட்டால் ஹாலிவுட்டிலும் கை நனைக்கிற அளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது அவரது கிராஃப். நடிகன்னா இவர்தான்ப்பா என்று இவரது துல்லியமான நடிப்பை கொண்டாடிக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. இந்த நிலையில்தான் நடிப்பு தாண்டி பொயட், சிங்கர், டைரக்டர் என்று பன்முகம் காட்டிக் கொண்டிருக்கிறார் தனுஷ். தற்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் ‘பவர் பாண்டி’ படத்தின் ஷுட்டிங்கையும் 90 சதவீதம் முடித்துவிட்டாராம். அதற்குள்ளாகாவா….. என்று ஆச்சர்யம் வருகிறதல்லவா? அங்குதான் ‘உள்ளேன் ஐயா’ சொல்கிறது தனுஷின் உழைப்பு.

இந்தப்படத்தை முடித்த கையோடு தனுஷ் கை நனைக்கப் போவது சவுந்தர்யாவின் படத்திற்காகதான். அவர் இயக்கும் படத்தை கலைப்புலி தயாரிக்கிறார் அல்லவா? இந்தப்படம் ஒரு டிராவல் சம்பந்தமான படம் என்கிறார்கள். தனுஷ்தான் ஹீரோ என்று பரவலாக சொல்லப்பட்டாலும், ஹீரோ அவரல்ல என்பதுதான் இந்த நிமிடத்து இழுபறி.

கோச்சடையான் என்ற ஒரு படத்தை மட்டுமே இயக்கியிருக்கும் சவுந்தர்யா, அவ்வளவு அனுபவம் இல்லாதவர் என்பதால் தன் முழு ஆதரவையும் அவருக்கு கொடுக்க தயாராகிவிட்டார் தனுஷ். யெஸ்… அந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் இம்மூன்று பொறுப்புகளையும் தனுஷே ஏற்றுக் கொண்டுவிட்டாராம்.

அப்ப வடசென்னை? அது கெடக்கு… அப்புறம் பார்த்துக்கலாம்!

To listen audio click below:-

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
ajith-fans-upset
காஜலை பார்த்தாச்சு! தலய காணுமே? சேத்துப்பட்டில் அஜீத் ரசிகர்கள் பட்டினி!

இன்னும் சில தினங்களில் ஐதராபாத்தில் அஜீத்தின் 57 வது பட ஷுட்டிங் நடக்கவிருக்கிறது. முதல் ஷெட்டியூலை வெளிநாட்டில் முடித்தவிட்டு சென்னை திரும்பிய டீம், இரண்டாவது ஷெட்யூலை பூந்தமல்லிக்கு...

Close