பாதி பேட்டியில் வெளிநடப்பு! தனுஷை டென்ஷனாக்கிய சேனல்!

சமயத்தில் சுண்டுவிரலில் தட்டினால், மண்டை நரம்பில் வலியெடுக்கும். அது தட்டுகிறவனின் திறமை. நேரமறிந்து தட்டுவதும், விவரமறிந்து வெட்டுவதும் பத்திரிகையாளர்களின் பாணி. அப்படியொரு சேனலிடம் சிக்கி பொறுமையிழந்தார் தனுஷ்.

விஐபி2 படத்தின் பிரமோஷனுக்காக பத்திரிகையாளர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள் தனுஷ், காஜோல், மற்றும் அப்படத்தின் இயக்குனர் சவுந்தர்யா ரஜினி ஆகியோர். கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவி வரும் ரஜினி கமல் அரசியல் என்ட்ரி குறித்த கேள்விகளை பேச ஆரம்பிக்கும் முன்பாகவே, ஒன்லி விஐபி2 என்று கூறிவருகிறார் சவுந்தர்யா. ஆனால் ஆந்திராவுக்கு போய் சிக்கிக் கொண்ட தனுஷிடம், அநியாயத்துக்கு கேள்வி கேட்டு பதறவிட்டார் அந்த பெண் நிருபர்.

சுசீலீக்ஸ் ல் வந்த வீடியோக்கள் பற்றிதான் தனுஷிடம் கேட்க ஆரம்பித்தார் அவர். அப்படியே பத்திரிகைகளில் வரும் கிசுகிசுக்கள் பற்றியும் வாயை திறக்க, கடும் கோபத்தில் தன் மைக்கை கழற்றிக் கொடுத்துவிட்டு வெளியேறிவிட்டார் தனுஷ். நல்லவேளையாக கோபம் தீர்ந்து மீண்டும் அரங்கத்திற்கு வந்த தனுஷ், மிச்சசொச்ச கேள்விகளுக்கு பதிலளித்தார். பேட்டியெடுத்த பெண்மணியும், அதற்கப்புறம் தனுஷுக்கு டென்ஷன் தரவில்லை.

அந்த வீடியோ லிங்க்- https://www.youtube.com/watch?v=3xLnvIeUaxY

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Kamal-SV Shekar
கமல்- கவர்னர் மீட்டிங்! எஸ்.வி.சேகர் யோசனை!

Close