வடிவேலுவை கொத்தும் காகங்கள்!

‘முன் வைத்த கால் என் காலா இருக்கணும். அது அடுத்தவனின் மூக்கு மேல கம்பீரமா நடக்கணும்!’ இதுதான் வடிவேலுவின் சமீபகால சர்வாதிகாரமாக இருக்கிறது. இனி இவரை டி.வியில் கூட பார்க்கக் கூடாது என்கிற அளவுக்கு படுபயங்கர பாதிப்பில் இருக்கிறார்கள் பலர்.

ஆனால் இது பற்றியெல்லாம் கவலைப்படாத வடிவேலுவை ஏதேதோ சம்பவங்கள் வந்து கவலைப்பட வைக்கிறதாம். (வேற வழி)

அவரது மருமகன் சமீபத்தில் வடிவேலுவை சந்தித்தாராம். அப்போது, “மாமா…அருமையான பிசினஸ் ஒண்ணு பண்ணப்போறேன். இரண்டு கோடி போட்டா ஒரே மாசத்துல அது டபுள் ஆகுற அளவுக்கு செம பிசினஸ். ரெண்டே மாசத்துல உங்க பணத்தை ரிட்டர்ன் பண்ணிடுறேன். கொடுங்க” என்றாராம். மருமவனாச்சே… என்று மனமுவந்து கொடுத்தாராம் இவரும்.

அப்புறம்?

போன மச்சான் போனாண்டி என்று போயே போய் விட்டார் அவர். பணத்தை திருப்பிக் கேட்டால், ஆள் லைனுக்கு வந்தால்தானே?

வரும்போது பூ மாதிரி வர்றாய்ங்க… கிளம்பும்போது நல்ல பாம்பை காதுல சுத்திட்டு கிளம்பிர்றாய்ங்க… என்று வாய்விட்டு புலம்புகிறாராம் வைகைப்புயல்.

நீங்க போட்ற விதைதான் மரமா வந்து மண்டையில இடிக்குது. குனிஞ்சுப் போங்க குபீர் சிரிப்பாளி…!

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
GKC_0930
நபிகள் நாயகத்தின் பொன் மொழிதான் அனிருத்!

சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “ அனிருத்...

Close