தாறுமாறான விமர்சனங்கள்! பிரசாந்த் மற்றும் ப்ளூ சட்டை மாறன் மீது வழக்கு!

பரமபத விளையாட்டில் பாம்பு வாயில் சிக்கிய பல்லி போலாகிவிட்டன தமிழ் படங்கள். அதுவும் படம் ஓடிக் கொண்டிருக்கு போதே, மொண்ணை… மொக்கை… என்று நாலு வரியில் டைப் அடித்து, அதை பேஸ்புக் ட்விட்டரில் போட்டு வெளியே க்யூவில் நிற்கும் அத்தனை பேரையும் தெறிக்க விடுகிற தேள் கொடுக்கு பையன்கள் நிரம்பி விட்டார்கள். அதிலிருந்து சற்றே நாகரீகம் பெற்ற இன்னொரு கூட்டம் சினிமாவில் எட்டு வருடம் அசிஸ்டென்ட் டைரக்டராகவும் ஏழெட்டு படங்கள் புரட்யூஸ் பண்ணி அனுபவம் பெற்றது போலவும் சினிமாவுக்கு மார்க் போட்டு கிழிப்பதெல்லாம் தமிழ்சினிமாவின் சாபக்கேடு.

இதோ அடுத்தக்கட்ட அச்சுறுத்தல்… வீடியோ விமர்சனம்.

நிறைகுறைகளை நேர்த்தியாக சொல்கிற தமிழ்ஹிண்டு உள்ளிட்ட சில வீடியோக்கள் மட்டும் சிறப்பு. மற்றதெல்லாம் பார்க்கிற நமக்கே ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்தான்! ’

மலேரியாவில் சிக்கியவன், கொசுவிடமே கூட்டணி போட்டதைப் போல இந்த கடுப்பு ஆசாமிகளிடம் கணக்கு வழக்கு வைத்துக் கொண்டு சுமூகமாக சென்றுவிடுகிறது சில தயாரிப்பு நிறுவனங்கள். ஆனால் நெட்டு குத்து தெரியாத சிலருக்கு? அல்லும் பகலும் அயோடெக்ஸ் ட்ரீட்மென்ட்தான்!

பொறுத்து பொறுத்துப் பார்த்த விநியோகஸ்தர் ஒருவர், அப்படி தாறுமாறு தக்காளி சோறு விமர்சனப் பார்ட்டிகளான இட்ஸ் பிரசாந்த், மற்றும் தமிழ் டாக்கீஸ் இளமாறன் (புளூ சட்டை) ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார். ரெமோ படத்தின் சில ஏரியாக்களை வாங்கி வெளியிட்டிருக்கும் JSK கோபி என்பவர்தான் அவர். தமிழ் திரைப்பட சங்கத் தலைவர் கலைப்புலி தாணு இவருக்கு முழு ஆசிர்வாதம் வழங்கியிருக்கிறாராம்.

இது சம்பந்தமா ஒரு வீடியோவை விரைவில் எதிர்பார்க்குறோம் ஆணியை முழுங்குன அண்ணனுங்களா!

To Listen Audio click Below:-

3 Comments

 1. Unmai says:

  படம் ஒழுங்கா எடுக்க தெரியாத பொறம்போக்கு நாய்க்கு உண்மைய சொன்னா கோபம் வரத்தான் செய்யும்.

 2. Unmai2 says:

  Thaanu support aa ?
  Avane oru sori pudicha monna nai … Avanukku sorinji vuduthu intha naayaa?

 3. candylanka says:

  படம் என்னா இலவசமாகவா காட்டுராங்க????? இலவசமாக காட்டினால் இவங்கட கோபத்தை ஏற்றுக்கொள்ளலாம்… பிரியானி சமைப்பவன் புன்னாக்க சமைச்சி வெச்சிட்டு அத புன்னாக்குன்னு சொன்னவனுக்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த பிரியானி பன்னி இருக்கேன்… வாய மூடிக்கிட்டு தின்னுட்டு மட்டும் போன்னு சொல்லுற மாதிரி இருக்கு

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
ks
கத்தி சண்டை படத்தில் பைக் சேசிங்

Close