போத்ராவுக்கு பெப்பே… தப்பித்தது மொட்ட சிவா!

பிரபல பைனான்சியர் போத்ரா, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திற்காக ஏழரை கோடி பைனான்ஸ் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் படத் தரப்போ, இந்தப்படத்திற்கும் போத்ராவுக்கும் சம்பந்தமில்லை. அவர் கொடுத்த கடன் வேறொருவருக்கு. ஆனால் பிரச்சனையை இந்த படத்தோடு முடிச்சுப் போட்டு பார்க்கிறார் என்று கூறிவருகிறது.

இந்த நிலையில்தான் மொ.சி.கெ.சி படத்தை தனது பாக்கியை பெற்றுத் தராமல் ரிலீஸ் செய்யக் கூடாது என்று வழக்கு போட்டிருந்தார் போத்ரா. நேற்று அந்த வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டது. படத்தை வெளியிட எவ்வித தடையும் இல்லை என்று கூறிவிட்டது நீதிமன்றம்.

இந்த சந்தோஷ செய்தியை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துக் கொள்வதற்காக வந்திருந்தார்கள் படத்தின் ஹீரோ லாரன்ஸ், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, இசையமைப்பாளர் அம்பரீஷ் கணேஷ், மற்றும் தயாரிப்பாளர் டி.சிவா ஆகியோர். சற்றே உணர்ச்சிப் பெருக்குடன் காணப்பட்ட படத்தின் இயக்குனர் சாய் ரமணி, “இந்தப்படம் மட்டும் இந்த முறையும் தள்ளிப் போயிருந்தால், இரண்டாயிரம் ஆதரவாளர்களுடன் வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருந்தேன்”.

“ஏன்தான் இப்படி அடுத்தவர் பிழைப்பில் விளையாடுறாங்களோ தெரியலையே? அந்த டேஷ் பசங்களுக்கு சொல்லிக்கிறேன். இனிமேலாவது உங்க ஆட்டத்தை நிறுத்திக்கணும்” என்றெல்லாம் பொங்கினார். பல நாட்கள் இப்படம் வரவில்லையே என்று தாரை தாரையாக கண்ணீர் வடித்ததாகவும் குறிப்பிட்டார்.

இங்கு நடக்கும் பிரச்சனை ஏதும் புரியாத என் அம்மா, ஏண்டா படம் வரல? என்று கேட்டுக் கொண்டேயிருப்பாங்க. அவங்களுக்காகவாவது இந்தப்படம் தடையில்லாமல் வந்திடணும் என்றார் லாரன்ஸ்!

1 Comment

  1. Shankar says:

    It is actually 11 crores. Master thief in noble man’s vesham. Sorry to the financier who lost money to master dancing chor.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Dora Movie Stills 012
Dora Movie Stills Gallery

Close