டைவர்ஸ் வாங்கிய பின்பும் மேரேஜ் இமேஜ் போகல! அமலாபாலும் அடுக்கடுக்கான தோல்வியும்!

‘திருமணத்திற்குப் பின் தொடர்ந்து நடிப்பீங்களா?’ என்ற கேள்வியை எதிர்கொள்ளாமல் எந்த நடிகையும் தாலி கட்டிக் கொள்ளவே முடியாது. அப்படியொரு மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான் ஒவ்வொரு ரசிகனும். அதை நிரூபிப்பது போலவே இருக்கிறது கல்யாணம் கட்டிக் கொண்ட நடிகைகளின் சினிமா வாழ்க்கை. முன் உதாரணமாக முப்பது பேரை கூட ஒரே நேரத்தில் லிஸ்ட் போட்டுவிடலாம். இதில் அண்மைக்கால அவஸ்தை ராணியாக இருப்பவர் அமலாபால்தான்.

டைரக்டர் விஜய் தேனிலவுக்கு வாங்கிய பைனான்ஸ் முடிவதற்குள் விவகாரத்து வாங்கிக் கொண்டு டாடா காட்டிய புண்ணியவதி. அதற்கப்புறம் தமிழ், மலையாளம் என்று அவர் நடித்த படங்கள் எதையும் ரசிகர்கள் கண் கொண்டு பார்க்க தயாராக இல்லை. அதனால் எந்தப்படமும் ஓடவும் இல்லை. இவ்வளவு ரிஸ்க் இருந்தும் அமலாபாலுக்கு ‘திருட்டுப்பயலே 2’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததுதான் ஆச்சர்யம்.

இந்த மாதம் திரைக்கு வரப்போகும் அப்படத்திற்கு விநியோகஸ்தர்கள் மத்தியிலும், தியேட்டர்காரர்கள் மத்தியிலும் துளி கூட ரெஸ்பான்ஸ் இல்லையாம். அதிலும் படுதோல்வி நடிகர் பட்டியலில் இருக்கும் பாபிசிம்ஹாவும், கல்யாண இமேஜை அழிக்க முடியாத இக்கட்டிலிருக்கும் அமலாபாலும் சேர்ந்து மிரட்டினால் என்னாகும்?

சின்ன சின்ன நடிகர்களின் படங்கள் கூட சுமார் 100 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிற சூழ்நிலையில், முக்கி முக்கி போராடினாலும் 60 ஐ தாண்ட முடியவில்லையாம் இவர்களால்.

பால் இப்படி அநியாயமா திரிஞ்சுப்போச்சே?

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Thodra
ஒரே ஒரு போன் கால்தான்! ஓடிவந்தார் சிம்பு! பரவசப்படும் ‘தொட்ரா ’ ஹீரோ!

ராம்கோபால் வர்மா மாதிரியான கரண்ட் பாய்ச்சும் ஆசாமிகள் வைத்திருந்த தலைப்பை அர்த்த ராத்திரியில் ‘லபக்கி’க் கொண்டு வந்த மாதிரிதான் இருக்கிறது ‘தொட்ரா’ என்கிற தலைப்பு. ஆனால் ஆக்ஷனுக்கோ,...

Close