“கார வச்சிருந்த சொப்பன சுந்தரிய இப்போ யாரு வச்சிருக்கா….”

வழக்கமான ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு, அதை வழக்கத்திற்காக மாறான புதுமையான முறையில் சித்தரிப்பதே, எதற்கும் ‘டென்ஷன்’ ஆகாத இயக்குனர் வெங்கட் பிரபுவின் தனிச் சிறப்பு…. சம்பீத்தில் இவர் ‘சென்னை 28 – II’ படத்திற்காக ‘யூடூபில்’ வெளியிட்ட இரண்டு டீசர்களும், ஒரு டிரைலரும் பத்து லட்ச பார்வையாளர்களை தாண்டி போய் கொண்டிருப்பதே அதற்கு சிறந்த உதாரணம்…. தமிழ் திரையுலகில் பல ஆண்டு காலமாக விடை தெரியாமல் வலம் வந்து கொண்டிருந்த ஒரு கேள்வி, “கார வச்சிருந்த சொப்பன சுந்தரிய இப்போ யாரு வச்சிருக்கா….” தற்போது அந்த கேள்விக்கு தன்னுடைய டீசர் மூலம் விடை அளித்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இரண்டு டீசர்கள் மற்றும் ஒரு டிரைலர் என வெளியான மூன்று காணொளிகளும் தற்போது பத்து லட்சத்திற்கும் அதிகமாக பார்வையாளர்களை கடந்திருப்பது ‘சென்னை 28 – II’ படத்திற்கு கிடைத்த கூடுதல் சிறப்பு. நமது இந்திய கிரிக்கெட் அணிக்கு, எந்த தருணத்திலும் ‘டென்ஷன்’ ஆகாத கேப்டனாக திகழ்பவர் தோனி…. அதேபோல் தமிழ் திரையுலகில், இக்கட்டான தருணங்களை எளிதாக கையாளும் ஒரு இயக்குனராக திகழ்பவர் வெங்கட் பிரபு என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லலாம்.

“எங்கள் சென்னை 28 – II படத்தின் இரண்டு டீசர்கள் மற்றும் ஒரு டிரைலர் மூலம் நாங்கள் தொடர்ந்து மூன்று சதம் அடித்திருப்பது, எங்கள் ஒட்டுமொத்த குழுவினருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது….எங்கள் மீது எல்லையில்லா அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்….” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

No Comments

Leave a Reply

Facebook

Follow Us on Twitter